
பிப்ரவரி மாதம் வரக்கூடிய 11ஆம் தேதி, முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை அன்றே, தைப்பூச விரதநாள் வர இருக்கிறது. இந்த தைப்பூச விரதத்திற்கு 48 நாள், 21 நாள், 11 நாள், 6 நாள், 3 நாள், ஒரு நாள் என்று விரதம் இருக்கக் கூடிய பக்தர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். நீங்கள் எத்தனை நாள் விரதம் இருக்கிறீர்கள் என்பது முக்கியம் கிடையாது.
அந்த விரதத்தை எப்படி மேற்கொள்கிறீர்கள் என்பது தான் மிக மிக முக்கியம். நீங்க முருகனுக்கு எத்தனை நாள் விரதம் இருப்பீர்கள் கமெண்டில் பதிவு செய்யவும். முருகனுக்காக வேண்டி ஒரே ஒரு நாள் விரதம் இருந்தாலும் அந்த விரதத்தில் மிக மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா உங்களுக்கு.
முருகனை நினைத்து விரதம் இருக்கும் பக்தர்கள் 3 விஷயங்களை சரியாக கடைபிடிக்க வேண்டும். முருகனை நினைத்து வேண்டுதல் இருப்பவர்களுடைய உடல், மனம், உணர்வு இது மூன்றுமே சுத்தமாக இருக்க வேண்டும். உடல் சுத்தத்தை எப்படி உறுதி செய்து கொள்வது. வழக்கம் போல சுத்தம் பத்தமாக குளித்துவிட்டு இருக்க வேண்டும்.
விரதத்தை துவங்குவதற்கு முன்பாக பஞ்சகவ்யம் என்று சொல்லப்படும் தீர்த்தத்தை வாங்கி குளிக்கின்ற தண்ணீரில் விட்டு குளித்தால் நம்முடைய உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் எல்லாம் விலகி நம்முடைய உடல் சுத்தம் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவதாக சொல்லப்படுவது மனசுத்தம். முருகனை வழிபாடு செய்வதற்கு மனது எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும். மனதை சோப்பு போட்டு கழுவ முடியாது. மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களை எல்லாம் வெளியில் தூக்கி போட்டு விடுங்கள். யாருக்கும் கெடுதல் நினைக்கக் கூடாது. பொறாமை எண்ணத்தை மனதில் வைத்துக் கொள்ளக்கூடாது.
பகையை மனதில் வைத்துக் கொள்ளக்கூடாது. எப்போதும் முருகன் குடியிருக்கும் மனது சுத்தபத்தமாக இருக்க வேண்டும். சுத்த பத்தமாக இருக்கும் மனதில் தான் முருகன் குடியிருப்பான். கள்ளம் கபடம் இல்லாத அப்பற்ற அழுக்கற்ற மனசு என்று சிலரை பார்த்து நாம் சொல்லுவோம். நம்முடைய மனதும் அது போல இருக்க வேண்டும். அப்போதுதான் முருகன் நம் இதய வீட்டிற்குள் கொடி வருவான்.
மூன்றாவது விஷயம் உணர்வு. உணர்ச்சி பூர்வமாக முருகனுக்கு விரதம் இருப்பது தான் மிக மிக முக்கியம். இந்த உணர்வு சம்பந்தப்பட்ட விஷயத்தில் முருகனை எப்படி வழிபாடு செய்வது. உணவுப்பூர்வமாக ஒரு மணி நேரம் முருகனை நினைத்து மௌன விரதம் இருங்கள். விரதம் இருக்கக்கூடிய நாட்களில் ஏதாவது ஒரு மணி நேரம் கண் விழித்து இருக்கக்கூடிய சமயத்தில், யாரிடமும் பேசாமல் ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து “ஓம் சரவணபவாய நமஹ” என்ற மந்திரத்தை மட்டும் மனதிற்குள் சொல்லி மௌன விரதம் இருந்து பாருங்கள். விரதத்தின் முழு பலனை உங்களால் அடைய முடியும்.
இதையும் படிக்கலாமே: எப்பேர்ப்பட்ட வேண்டுதலையும் நிறைவேறும் நாள்
இந்த மூன்று விஷயங்களை முழுமையாக பின்பற்றினாலே போதும். முருகன் உங்களோடு வந்து ஐக்கியமாவதை உணர்ந்து விடுவீர்கள். 11 நாளோ, 6 நாளோ மேல் சொன்ன விஷயங்களை கடைப்பிடித்து விட்டால் இதுவே உங்களுக்கு காலப்போக்கில் பழகிவிடும். தினமும் இந்த விஷயங்களை பின்பற்ற துவங்கி விட்டால் வாழ்க்கையில் பிறகு துன்பமே இருக்காது என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.