- Advertisement -
- Advertisement -

கணவன் மனைவிக்குள் சரியான புரிதல் இல்லை என்றால் அவர்கள் பிரிவை நோக்கி பயணம் செய்கிறார்கள். அல்லது குழந்தைகளுக்காக சகித்துக் கொண்டு போலியான வாழ்க்கையில் பயணிக்க முடிவுகளை எடுக்கிறார்கள். மனதளவிலும் அல்லது நிஜத்திலும் பிரிந்து போன தம்பதிகள் இடையே மீண்டும் பாசம் உருவாக செய்ய, இவரால் மட்டுமே முடியும். யார் அவர்? அவரை எப்படி வழிபட வேண்டும்? என்னும் ஆன்மிகம் சார்ந்த தகவலை தான் இப்பதிவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.

காதல், திருமணம், உறவுகள், சுகபோக வாழ்க்கை என்று அனைத்திற்கும் காரகத்துவம் பெற்றுள்ளவர் சுக்கிர பகவான். சுக்ர பகவான் அருள் இருந்தால் திருமண வாழ்க்கையும், காதல் வாழ்க்கையும் இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கையில் தோல்வியை சந்தித்த கணவன் மனைவி இருவரில் ஒருவர், யாரேனும் இந்த பரிகாரத்தை செய்யலாம். சுக்கிர பகவானை வழிபட்டு வர, தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.

- Advertisement -

சுக்கிர பகவானுக்கு உகந்த நிறம் வெள்ளை! இந்த நிற பொருட்களை தானம் செய்து வந்தாலும், சுக்ர அருள் கிடைக்கும். சுக்ர பகவானுடைய அருள் கிடைக்க என்ன செய்யலாம்? மகாலட்சுமியை வழிபடுவதும், சுக்கிர அருளை பெற்று தரும். எனவே வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து வெள்ளை நிற உடையை உடுத்திக் கொண்டு, வெள்ளை நிற பொருட்கள் அதாவது பால், மோர், பாயாசம் என்று வெள்ளை பொருட்களை நைவேத்தியம் படைத்து, வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்தால் சுக்ர அருள் கிடைக்கும். மகாலட்சுமியின் அருள் பெற “ஓம் ஸ்ரீ மகாலட்சுமியை நம” என்னும் மந்திரத்தையும், சுக்கிர அருள் பெற “ஓம் ஸ்ரீ சுக்ராயை நம” என்னும் மந்திரத்தையும் 108 முறை பூஜை செய்யும் வேளையில் ஜபிக்க வேண்டும்.

பால், தயிர், மோர், வெள்ளை நிற பொருட்கள், வெள்ளி காசு, வெள்ளை உடை போன்றவற்றை ஏழை பெண் ஒருவருக்கு தானம் செய்யலாம். இந்த பொருட்களை வெள்ளிக்கிழமையில் ஏழை தம்பதியர்களுக்கு தானம் செய்ய, விரைவில் நல்ல பலன் கிடைக்கும். மேலும் சுக்கிர பகவானுக்கு தாமரை மலர் என்றால் ரொம்பவும் பிரியும், எனவே தாமரை மலர் கொண்டு சுக்கிர பகவானை வழிபட்டால், நம் வேண்டுதல்களுக்கு உடனே செவி சாய்ப்பார் சுக்கிர பகவான்.

- Advertisement -

சுக்கிர பகவானுக்கு நெய் போட்டு தீபம் ஏற்றி வர வேண்டும். நவகிரக சந்நிதிக்கு சென்று வெள்ளை நிற பட்டு வஸ்திரத்தை சுக்கிர பகவானுக்கு சாற்றி, வெள்ளை நிற பொருட்களை நைவேத்தியம் படைத்து, வெள்ளிக்காசு ஒன்றை வைத்து, நெய் தீபம் ஏற்றி, அதில் கற்கண்டுகளை போட்டு தீபம் ஏற்றி வையுங்கள். இது போல ஆறு வெள்ளிக்கிழமைகளில் சுக்ர பகவானுக்கு தீபம் போட்டு வர, சீக்கிரமே பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

இதையும் படிக்கலாமே:
புதன் கிழமை, அதிசக்தி வாய்ந்த பெருமாள் வழிபாடு

தம்பதியர்களாக இந்த பரிகாரத்தை செய்து வந்தால், மனதளவில் பிரிந்தவர்கள் மீண்டும் அவர்களுக்குள் அன்னோன்யமும், பாசமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. பெண்கள் வெள்ளி மோதிரம் அல்லது வெள்ளி உலோகத்தால் ஆன ஏதாவது ஒரு அணிகலனை அணிந்து வந்தால் சுக்கிர அருள் பெற்று, சுகபோக வாழ்க்கையுடன், தம்பதிகளுக்குள் நெருக்கமும் உண்டாகும்.

- Advertisement -