
எப்போதுமே நாம் எடுக்கக்கூடிய முயற்சிகளில் தடைகள் வந்து கொண்டே இருக்கிறது என்றால், தரித்திரம் நம்மை பின்தொடர்கிறது என்று தான் அர்த்தம். நம்முடைய வீட்டில் அன்றாடம் சண்டை சச்சரவுகள் வருகிறது, மன நிம்மதி இல்லை, பூஜை அறையில் மனநிறைவாக சாமி கும்பிட முடியவில்லை என்றால், நம் வீட்டிற்குள் தரித்திரம் தங்கி இருக்கிறது என்றுதான் அர்த்தம்.
வீட்டில் ஒரு நல்ல விஷயமும் நடக்க மாட்டேங்குது. சுப காரிய தடை இருக்கிறது என்றாலும், நம்மை சுற்றி தரித்திரம் இருக்கிறது என்றுதான் அர்த்தம். காலமும் நேரமும் சூழ்நிலையும் நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், அதை தட்டிக் கழிக்க கூடிய ஒரு கெட்ட சக்தி தான் இந்த தரித்திரம். இந்த தரித்திரத்தை நாமே நன்றாக உணருவோம்.
நம்முடைய மனசே சொல்லும் நமக்கு ஏதோ கெடுதல் நடந்து கொண்டிருக்கிறது என்று. அந்த சமயத்தில் உங்களை நீங்களே அந்த தரித்திரத்திலிருந்து வெளிக் கொண்டு வர வேண்டும் என்றால், பின் சொல்ல கூடிய இந்த பரிகாரத்தை செய்தாலே போதும்.
கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் முருகன் தான். அந்த முருகனை நினைத்தே இந்த பரிகாரத்தை நாம் மேற்கொள்ளுவோம். நாளை வரும் வெள்ளிக்கிழமையிலும் இந்த பரிகாரத்தை செய்யலாம், அல்லது செவ்வாய்க்கிழமையிலும் இந்த பரிகாரத்தை செய்யலாம், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தவறு கிடையாது.
வீடு அசுத்தம் அடையும் போது, வீட்டிற்குள் தரித்திரம் புகுந்து விடும். வீட்டை சுத்தம் செய்யுங்கள். வாசல் தெளித்து கோலம் போடுங்கள். பூஜை அறையை சுத்தம் செய்து மணக்க மணக்க பூக்கள் போட்டு எப்போதுமே வீட்டிற்குள் நல்ல ஊதுபத்தி வாசம் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு ஒரு மஞ்சள் துணியில் இந்த 3 பொருட்களை வைத்து முடிச்சாக கட்ட வேண்டும். மிளகு, சுக்கு, கடுக்காய், இந்த மூன்றும் நாட்டு மருந்து கடைகளில் சுலபமாக கிடைக்கும். வாங்கிக் கொள்ளுங்கள்.
மூன்று மிளகு, மூன்று துண்டு சுக்கு, மூன்று கடுக்காய், வைத்து மஞ்சள் நிற துணியில் முடிச்சாக கட்டிக் கொள்ள வேண்டும். உள்ளங்கைகளில் அந்த முடிச்சை வைத்துக் கொண்டு “முருகா நீ தான் என் வீட்டில் இருக்கும் தரித்திரத்தை விரட்டி அடிக்க வேண்டும். உன்னை நம்பி தான் இந்த பரிகாரத்தை செய்கின்றேன்” என்று முருகர் மீது பாரத்தை போட்டு முருகரை உங்கள் வீட்டில் நிலை வாசலில் காவலாக வைத்து விடுங்கள், அவ்வளவுதான்.
வீட்டிற்குள் எப்படி தரித்திரம் நுழையும். உங்கள் உடம்பை பிடித்த தரித்திரமும் விலகும். நீங்கள் நிலை வாசலுக்கு உள்ளே வரும்போதும் வெளியே செல்லும் போதும் உச்சந்தலையின் வழியாக, எதிர்மறை ஆற்றலை இந்த முடிச்சு தன்னகத்தே ஈர்த்ததுக் கொள்ளும். இவ்வளவுதான் பரிகாரம். 48 நாள் இந்த முடிச்சு நிலை வாசலிலேயே இருக்கட்டும்.
48 நாள் கழித்து இந்த முடிச்சை கொண்டு போய் கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். இந்த 48 நாட்களுக்கு முன்பு உங்கள் வீடு இருந்ததற்கும், 48 நாள் இந்த பரிகாரத்தை செய்த பிறகு உங்கள் வீடு இருப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை நீங்கள் நிச்சயமாக உணருவீர்கள்.
இதையும் படிக்கலாமே: சனி பகவானால் வரும் தாக்கத்திலிருந்து தப்பிக்க பரிகாரம்
இடைப்பட்ட இந்த 48 நாளும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி முருகா முருகா என்று கூப்பிட்டு வழிபாடு செய்ய வேண்டும். வீட்டில் 48 நாளும் கந்த சஷ்டி கவசத்தை ஒலிக்க விட வேண்டும். இந்த எளிய பரிகாரம் அனைவருக்கும் நன்மையை செய்யும் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.