- Advertisement -

பணம் பெயர் புகழ் பதவி அந்தஸ்து கிடைக்க தாயார் வழிபாடு

- Advertisement -

சில பேருக்கு வாழ்க்கையை மிக பிரம்மாண்டமாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சாதாரணமாக நடுத்தர நிலையில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள், மிகப்பெரிய பிரபலமாக மாற வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். செய்யும் வேலையில் நல்ல முன்னேற்றம், செய்யும் வியாபாரத்தில் பெரிய லாபத்தை பெற வேண்டும், பெரும் புள்ளிகள் பெயர் பட்டியலில், நம் பேரும் இடம்பெற வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள, பிரம்மாண்டமாக நீங்கள் வசிக்கும் இடத்தில் உங்களுடைய கொடி பறக்க, நீங்கள் செய்ய வேண்டிய எளிமையான ஒரு அம்பாள் வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வெள்ளிக்கிழமை அம்பாள் வழிபாட்டிற்கு சிறந்தது. வெள்ளிக்கிழமை பூஜையின் போது பின் சொல்லக்கூடிய இந்த வழிபாட்டு முறையில், இந்த அம்மனின் பெயரை 108 முறை உச்சரிக்க, நீங்கள் கேட்ட வரம் அல்லாமல், கேட்காத கேட்காத நல்ல நல்ல வரங்களும் கிடைக்கும்.

- Advertisement -

பணக்கார கடவுள் பெருமாளின் துணைவியாக இருப்பவள் தான் பத்மாவதி தாயார். பெருமாளுக்கு செல்வம் குவிய காரணம் பெருமாள் மார்பில் மகாலட்சுமி தாயார் இருப்பது தான். இந்த பத்மாவதி தாயாரை நாம் எந்த அளவுக்கு வெள்ளிக்கிழமை தோறும் வணங்கி வழிபாட்டை மேற்கொள்கின்றோமோ, அந்த அளவுக்கு நமக்கு அதிர்ஷ்டம் அடிக்க துவங்கும்.

பத்மாவதி தாயாரை நம் வசம் வைத்துக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு மணக்க மணக்க சாம்பிராணி தூபம் ஏற்றி வைத்துவிட்டு, மகாலட்சுமிக்கு குங்குமப்பூ சேர்த்த பால் பாயாசம் செய்து வைக்க வேண்டும். ஜவ்வரிசி சேமியா இதில் எது போட்டு வேண்டும் என்றாலும் இந்த பாயாசத்தை நீங்கள் தயார் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

மகாலட்சுமிக்கு வெள்ளை நிறத்தில் மல்லிகை பூ அலங்காரம் செய்துவிட்டு, ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்து பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை 108 முறை எழுதலாம். முடியாதவர்கள் 108 முறை இந்த மந்திரத்தை சொல்லலாம். ஒரு நோட்டு புத்தகத்தை போட்டு வாரந்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் உங்களால் முடிந்த அளவு அந்த நோட்டு புத்தகம் முடியும் வரை, இந்த தயாரின் மந்திரத்தை எழுத எழுத உங்களுடைய தலையெழுத்து மாறும். பிரம்மாண்டமான வளர்ச்சியை கொடுக்கும் தாயார் மந்திரம் இதோ.

மந்திரம்

ஓம் ஹ்ரீம் பத்மாவதியே வஷட் !

- Advertisement -

இந்த மந்திரத்தை இலட்சத்தி எட்டு முறை எப்போது நீங்கள் உச்சரித்து முடிக்கிறீர்களோ, அப்போது உங்கள் வாழ்க்கையில் பிரம்மாண்ட வெற்றி கிடைத்துவிடும். ஒரே நாளில் இது சாத்தியம் அல்ல. நமக்கும் வேலைகள் எல்லாம் இருக்கிறது. எல்லா வேலைகளுக்கும் நடுவே பத்து நிமிடம் நேரம் ஒதுக்கி இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். தினமும் 108 முறை உச்சரித்து வாருங்கள். அதுவே போதும். லட்சத்து எட்டு முறை இந்த மந்திரத்தை உச்சரித்து முடிக்கும் போது உங்கள் பணக்கஷ்டம் எல்லாம் தீர்ந்து, தேவைக்கு ஏற்ப வருமானம் அதிகரிக்க துவங்கும்.

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமி வீட்டிற்குள் வர வெள்ளிக்கிழமை வழிபாடு

சாதாரண நிலையில் இருப்பவன் உடனடியாக பிரம்மாண்ட நிலையை எட்டிப் பிடிப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இன்று நீங்கள் இந்த வழிபாட்டை செய்ய துவங்கினால் குறைந்தது மூன்று வருடத்தில் நீங்கள் நினைத்த இலக்கை அடைந்து விடுவீர்கள். மூன்று வருடம் தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்தாலும் தவறு கிடையாது. நிச்சயமாக இந்த எளிமையான தாயார் வழிபாடு அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -