- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா?

பொதுவாக நம்மோடு நெருங்கி பழகியவர்கள் நமக்கு மிகவும் பிடித்தவர்கள் மற்றும் நம் நெருங்கிய உறவினர்கள் நம்மோடு தொடர்புடைய சில நண்பர்கள் என நம் நமக்கு மிகவும் தொடர்புடையவர்கள் இறந்து விட்டால் சில நேரங்களில் நமது கனவில் அவரது உருவங்களும் அல்லது அவரது தோற்றங்களும் வருவது வாடிக்கையான ஒன்றுதான் அவ்வாறு இறந்தவர்கள் நம் கனவில் வருவதால் ஏற்படும் பலன்கள் பற்றி ஜோதிடம் என்ன கூறுகிறது என்பதைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

நமக்கு வேண்டப்பட்ட சிலர் யாராவது இறந்து விட்டது போல நமக்கு சில சமயங்களில் கனவுகள் வரும் அவ்வாறு கனவுகள் வந்தால் துன்பங்கள் அனைத்தும் விலகப் போகிறது என்று அர்த்தம். அதேபோன்று இறந்து போனவர்களை நாம் சுமந்து தூக்கி செல்வது போன்ற கனவு வந்தால் நமக்கு நன்மைகள் வந்து சேரும். அதேபோல ஏற்கனவே இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் அது நமக்கு நல்லது கிடையாது. அதுபோன்று ஏற்கனவே இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுதால் கோவிலுக்கு சென்று கடவுளுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

- Advertisement -

இறந்து போன தாய் அல்லது தந்தை கனவில் கண்டால் கனவு காணும் நமக்கு வரும் ஆபத்துக்களை அவர்கள் தங்களது வருகையை சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்துள்ளார்கள் என்று பொருள். எனவே தாய் அல்லது தந்தை இறந்து போன பிறகு நம் கனவில் வந்தால் நமக்கு ஏதோ ஆபத்து நிகழப்போகிறது என்று நாம் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இயற்கையாகவே சிலர் மரணம் அடைந்திருப்பார்கள் அவ்வாறு இயற்கை மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று கனவுகள் சம்பந்தப்பட்ட நூல்களில் எழுதப்பட்டுள்ளது.

குறிப்பாக பேரன் பேத்தி என்று பெற்றெடுத்து நன்றாக தங்களது தலைமுறைகளுடன் வாழ்ந்து அனுபவித்த பெரியோர்கள் மரணமடைந்து நம் கனவில் வந்தால் அது நமக்கு அவர்கள் நேராக வந்து ஆசீர்வதிப்பது போன்ற பலனைத்தரும். எனவே நம் முன்னோர்கள் நம் கனவில் வருவது மிகவும் நல்லது தான் அவர்களின் ஆசி நமக்கு எப்போதும் உண்டு என்பதற்கான அர்த்தமே அது. ஆனால் விபத்து தற்கொலை போன்ற துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். மேலும் அந்த கனவுகள் வந்து சென்றபின் நமக்கு உடல் நலம் சரியில்லாமல் போக வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

அதுமட்டுமின்றி உங்களுக்கு சில விபத்துக்கள் அல்லது குடும்பத்தில் தகராறு, தேவையில்லாத வாக்குவாதம் மற்றும் வீண் சண்டை பிரிவு போன்றவை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற சில தேவையற்ற கனவுகளை தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். அவ்வாறு குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளும்போது நம் குடும்பத்துடன் சென்று அனைவரும் குலதெய்வத்தை வேண்டி பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கினால் தேவையற்ற கனவுகள் நீங்கும் என்பது உண்மை. மேலும் வயதானவர்கள், பெரியவர்கள் மற்றும் வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் ஆகியோர் நம் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே:
பூஜை அறையில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகள்

இது போன்ற ஆன்மீக தகவல்கள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Irandhavargal kanavil vandhal enna palan in Tamil.

- Advertisement -
Published by