பூஜை அறையில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகள்

poojai arai
- Advertisement -

நம் வீட்டில் அன்றாடம் செய்யும் பூஜையாக இருந்தாலும், விசேஷ நாட்களில் செய்யும் பூஜையாக இருந்தாலும் அதில் சில சந்தேகங்கள் நமக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றது. வெற்றிலையை எப்படி வைப்பது? தேங்காய் எப்படி உடைப்பது? எந்த இறைவனுக்கு எந்தப் பூவை சாத்துவது, எந்த பழங்களை இறைவனுக்கு படைப்பது, பூஜையை எப்படி ஆரம்பித்து எப்படி முடிப்பது, போன்ற சிறுசிறு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள இந்த பதிவினை காண்போம்.

poojai arai

நாம் பூஜை செய்யும் போது வெற்றிலையின் நுனியை கிள்ளி விட்டு வைக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அதனை கிள்ளக்கூடாது. வெற்றிலைக்கு நுனிப்பகுதி முக்கியமானது. ஆகவே அதை முழுமையாக தான் இறைவனுக்கு படைக்க வேண்டும். இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைக்கும் போது அதில் சுண்ணாம்பு வைக்கக்கூடாது. வாழைப் பழத்திற்கு காம்பு முக்கியம். காம்பினை கிள்ளிவிட்டு வாழைப்பழத்தை இறைவனுக்கு படைக்க கூடாது.

- Advertisement -

மாதுளை, கொய்யா, வாழை பழம், இலந்தை பழம், விளாம்பழம், மாம்பழம் இந்த பழங்களை பூஜைக்கு வைக்கலாம். வாழைப்பழத்தில் நாட்டுப் பழமாக இருந்தால் இன்னும் சிறப்பு. தேங்காயை உடைக்கும் போது குடுமியுடன் உடைத்துவிட்டு தான், பின்பு குடுமியை எடுக்க வேண்டும். தேங்காய் உடைக்கும் போது இரண்டு பக்கமும் சீராக உடைப்பது நல்லது. குடுமி இல்லாத தேங்காயை இறைவனுக்கு உடைக்கக்கூடாது.

coconut

சாம்பிராணி தூபம் போட்டு இறைவனை வழிபடுவது மிகவும் சிறந்தது. சாம்பிராணி தூபத்திலிருந்து வரும் வாசமானது நம் வீட்டில் கெட்ட சக்திகளை அண்டவிடாது. இந்த காலகட்டத்தில் சாம்பிராணி தூபம் போடும் பழக்கமானது நம் வீடுகளில் சற்று குறைந்து விட்டது.

- Advertisement -

நம் பூஜை அறையில் உள்ள விக்கிரகங்களை கோலம் போட்ட மரப்பலகையில் சரியான முறையில் அமர்த்தி விட்டு, விளக்கு ஏற்றி, சாம்பிராணி தூபம் போட்டு, பிறகுதான் கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். தீப தூப ஆராதனை முடித்து விட்டு தான் பிரசாதத்தை நெய்வேத்தியமாக படைக்க வேண்டும்.

நம் வீட்டில் நைவேத்தியத்தை சமைக்க முடியவில்லை என்றால் கற்கண்டு, அவல்பொரி, சர்க்கரை இவற்றை வைத்து பூஜை செய்யலாம். சமைப்பதாக இருந்தால், கட்டாயம் பச்சரிசியில் தான் சமைக்க வேண்டும். பச்சரிசியில் பொங்கல் வைத்து இறைவனை வழிபடுவது நல்லது மற்றும் கட்டாயமான ஒன்று.

- Advertisement -

விநாயகருக்கு அருகம்புல்லாலும், பெருமாளுக்கு துளசியாலும் பூஜிக்கலாம். துர்க்கைக்கு அரளி பூ உகந்தது. வில்வம், கொன்றை, தும்பை, ஊமத்தை, இவைகள் சிவனுக்கு உகந்தது. தாழம்பூவை சிவனுக்கு வைக்கக்கூடாது. தும்பைப் பூவை திருமகளுக்கு வைக்கக்கூடாது.

kamatchi vilakku

மல்லி, சாமந்தி, பன்னீர் ரோஜா, ரோஜா, சங்குப் பூ, தாமரை, மரிக்கொழுந்து, துளசி இவையெல்லாம் பூஜைக்கான மலர்கள். வாசனை இல்லாத மலர்களை சாமிக்கு வைக்கக்கூடாது. இறைவனுக்கு அர்ச்சனை செய்யும்போது முழுமையான பூக்களால் தான் அர்ச்சனை செய்ய வேண்டும். ரோஜாப்பூவிலிருந்து இதழ்களைக் கிள்ளியோ, சாமந்தி பூவில் இருந்து அதன் இதழ்களை கிள்ளியோ பூஜை செய்வது தவறான ஒன்று. பூக்களிலிருந்து இதழ்களை நம் கைகளால் பறித்து எடுக்கக்கூடாது. ஆகவே அர்ச்சனைக்கு செய்வதற்கு ஏற்ற மாதிரி சிறு பூக்களான மல்லிகை, அரளி போன்ற பூக்களை உபயோகித்து கொள்ளலாம். நாம் இறைவனுக்கு செய்யும் பூஜையில் ஏற்படும் சிறு சிறு தவறுகளை  திருத்திக் கொள்வதன் மூலம் அந்த இறைவனின் அருளை முழுமையாகப் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே
துளசி செழிப்பாக வளர மிக எளிய வழிகள்

இது போன்ற ஆன்மீக தகவல்கள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Veetil poojai seiyum muraigal. Daily pooja procedure at home in Tamil. Veetil poojai seivathu eppadi.

- Advertisement -