
அது என்ன பரிகாரமாக இருக்கும். ஒரே நாளில் கஷ்டத்தை தீர்த்து, பலன் தரும் பரிகாரம். அப்படி ஏதாவது ஒரு பரிகாரம் இந்த பூமியில் இருக்குதா என்ன, இருக்குங்க. ஒரே நாளில் பரிகாரம் செய்து அதற்கு உண்டான பலனை எதிர்பார்க்கக்கூடிய விசித்திரமான சில பரிகாரங்கள் இருக்கிறது. அந்த வரிசையில் ஞாயிற்றுக்கிழமை அன்று நீங்கள் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.
இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் குடும்பத்தில் இருக்கும் தீராத பிரச்சனைக்கு உடனடியாக ஒரு தீர்வை அந்த ஆண்டவன் கொடுத்து விடுவான். அது என்ன பரிகாரம் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
இந்த பரிகாரத்தை நீங்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் செய்து முடித்திருக்க வேண்டும். கொஞ்சமாக பச்சரிசி, கொஞ்சம் வெல்லம், இரண்டையும் நன்றாக கலந்து, இந்த கலவையை உங்கள் கையால் பசுமாட்டுக்கு சாப்பிட வைக்க வேண்டும். இதை பசு மாட்டிற்கு கொடுப்பதற்கு முன்பு சூரியனை ஒருமுறை வணங்கிக்கோங்க.
அப்படி கிழக்கு பக்கம் அந்த ஆறு மணி சமையத்தில் தான் உதயம் ஆவார். கூடவே ஒரு அகத்திக் கீரையையும் ஒரு கட்டு வாங்கிக் கொள்ளுங்கள். இதையம் உங்கள் கைகளால் பசுமாட்டுக்கு கொடுங்கள். இப்படி இந்த இரண்டு பொருட்களையும் பசுவிற்கு கொடுக்கும் போது உங்கள் மனதில் இருக்கும் அந்த தீராத துன்பம் எதுவோ அதை நினைத்து அந்த கோமாதாவிடம் வேண்டுதல் வையுங்கள். என்னுடைய இந்த கஷ்டம் தீர வேண்டும்.
கர்மவினையால் நான் ரொம்ப கஷ்டப்படுகின்றேன். இந்த கஷ்டத்தில் இருந்து எப்படியாவது என்னை விடுவித்து விடு என்று பசுவிடம் மனம் உருகி பிரார்த்தனை வையுங்கள். பசுவை மூன்று முறை வளம் வந்துவிட்டு, சிறிது நேரம் அந்த பசு மாடுகள் கட்டி வைத்திருக்கும் கோ சாலையில் அமர்ந்து குலதெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
பிறகு மீண்டும் நீங்கள் வீடு திரும்பலாம். ஒரு ஞாயிற்றுக்கிழமை செய்யும்போதே இதற்கு உண்டான பலன் என்ன என்பதை அடுத்த நாள், நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். ஆனால் பரிகாரம் செய்வதை நிறுத்தக்கூடாது. வாரம் தோறும் தொடர்ந்து இந்த பச்சரிசி வெல்லம் கலந்த கலவையை பசு மாட்டிற்கு கொடுங்க. அகத்திக் கீரையை கொடுத்துக் கொண்டே வாருங்கள்.
கர்ம வினைகள் உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கழிய தொடங்கும். கழுத்தை நெரிக்கும் கஷ்டங்கள் எல்லாம் கூட படிப்படியாக ஒரு முடிவுக்கு வந்துவிடும். குறிப்பாக வீட்டில் இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கவில்லை, நிலம் சார்ந்த பிரச்சினை, சொத்து சார்ந்த பிரச்சனை, வீடு கட்ட முடியவில்லை, நோய் நொடி பிரச்சனை, திருமணம் ஆகி கணவன் மனைவி பிரிந்து இருக்கிறார்கள், குழந்தைகள் இல்லை, இப்படி பெரிய அளவில் உங்களுக்கு பிரச்சனைகள் இருந்தால் அதை சரி செய்ய தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை இந்த பரிகாரத்தை செய்து வந்தாலே போதும். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
சில பேருக்கு வேலை கிடைக்காமல் இருக்கும். சிலர் பேர் தேர்வு எழுதிவிட்டு, இன்டர்வியூ முடித்துவிட்டு என்ன ரிசல்ட் என்று தெரிந்து கொள்ளாமல் ரொம்பவும் மனக்குழப்பத்தில் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்த பரிகாரத்தை செய்யலாம். சில பேர் எல்லாம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து சோர்ந்து போய் நொடிந்து போய் உட்கார்ந்து இருப்பார்கள்.
இதையும் படிக்கலாமே: வீட்டை பாதுகாக்க நிலைவாசல் பரிகாரம்
அப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்தாலும் உங்கள் இழப்பை ஈடுகட்டி, அந்த இழப்பிலிருந்து உங்களை மீட்டு எடுத்து நல்ல வாழ்க்கையை கொடுக்கும் சக்தியும் இந்த பரிகாரத்திற்கு உண்டு. எளிமையான பரிகாரம் தான். நம்பிக்கையோடு செய்தால் கை மேல் பலன் கிடைக்கும் என்ற கருத்துடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.