- Advertisement -

தீராத துன்பம் தீர விளக்கு பரிகாரம்

- Advertisement -

குடும்ப தலைவர்கள் எல்லாம் தினம் தினம், குடும்ப கஷ்டம் தீர வேண்டும் என்பதற்காக தான் விளக்கு ஏற்றி இறை வழிபாடு செய்கிறார்கள். இருந்தும் ஏனோ தெரியவில்லை. வீட்டில் கஷ்டங்கள் குறைந்த பாடாக இருக்காது. ஏதாவது ஒரு வகையில் வீட்டில் ஒரு பிரச்சனை தலை தூக்கிக் கொண்டே இருக்கும். சில வீடுகளில் வருமானம் இருக்காது.

சில வீடுகளில் கணவன் மனைவி ஒற்றுமை இருக்காது. சில வீடுகளில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்க மாட்டார்கள். சில வீடுகளில் குழந்தை பாக்கியமே இல்லாமல் இருக்கும். இப்படி உங்கள் குடும்பத்தில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள், துன்பங்கள் துயரங்கள் இருந்தாலும், அதை தீர்க்கும் ஒரு ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

குடும்ப கஷ்டத்தை தீர்க்கும் விளக்கு

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருட்கள். விளக்கு திரி, பசும்பால், ஏலக்காய் தூள். பசும்பாலில் நைசாக இடித்த ஏலக்காய் தூளை போட்டுக் கொள்ளுங்கள். (வெறும் ஏலக்காயை பொடிக்க வேண்டும். சர்க்கரை போட்டு ஏலக்காயை தூள் செய்யக்கூடாது.) இதில் எடுத்து வைத்திருக்கும் பஞ்சு திரியை முக்கி, இரண்டு நிமிடம் கழித்து அந்த திரியை மட்டும் எடுத்து, வெயிலில் நன்றாக காய வைத்து விடுங்கள். அந்த திரியில் ஏலக்காய் வாசமும் பசும்பால் வாசமும் இருக்கும். இந்த திரியை கொண்டு தினமும் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும்.

விளக்கு ஏற்றும் போது, அந்த விளக்கு திரியில் முனையில் கருப்பாக மாறும் அல்லவா. அந்த கருப்பு நிறத்தை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ஒரு டப்பாவில் போட்டு சேகரித்து வைத்துக் கொண்டே வாருங்கள். அது கொஞ்சம் மை போல நமக்கு கிடைக்கும். அந்த மையை தினமும் நெற்றியில் வைத்து வந்தால் குடும்பத்தில் இருக்கும் பணக்கஷ்டம் தீரும்.

- Advertisement -

இந்த திரியை போட்டு விளக்கு ஏற்றி குடும்ப தலைவிகள் எந்த வேண்டுதலை, பிரார்த்தனையாக வைத்தாலும் அந்த பிரார்த்தனை சீக்கிரம் பலிக்கும் என்பது நம்பிக்கை. பசும்பால் மகாலட்சுமியின் அம்சம் பொரியந்தியது. ஏலக்காயின் வாசம் நேர்மறை ஆற்றலை ஈர்க்கக் கூடியது. ஆகவே இந்த இரண்டு பொருட்களும் சேர்த்த திரியோடு தீபம் ஏற்றி இறைவழிபாடு செய்யும்போது நமக்கு கூடுதல் நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

தினமும் இந்த விளக்கு திரியை மாற்றித்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. 2 நாட்களுக்கு ஒரு முறையோ 3 நாட்களுக்கு ஒரு முறையோ திரியை மாற்றினால் போதும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். குடும்ப கஷ்டத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் குடும்பத் தலைவிகள் இந்த வழிபாட்டை இன்றிலிருந்து கூட தொடங்கலாம்.

இதையும் படிக்கலாமே: கோடி பணம் கொட்டி தரும் கொட்டைப்பாக்கு பரிகாரம்.

தொடர்ந்து 48 நாள் இந்த விளக்கு திரியில் வீட்டில் தீபம் போடும்போது நல்ல மாற்றங்கள் தெரியும். வெளியில் சொல்ல முடியாத ஏதாவது ஒரு கஷ்டம் மனதை உருட்டிக்கொண்டே இருக்கிறது எனும் போது அந்த கஷ்டம் தீர வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டே இந்த விளக்கை ஏற்றி பூஜையறையில் வழிபாடு செய்யுங்கள். அதுவே போதுமானது. குடும்ப கஷ்டத்தில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு ஆன்மீகம் சார்ந்த இந்த எளிய வழிபாடு நிச்சயம் பலன் அளிக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -