
அஷ்டமி திதி என்றதுமே நம் நினைவிற்கு வரக்கூடிய முதல் தெய்வமாக திகழ்ந்தவர் பைரவர். இவர் காவல் தெய்வமாக இருப்பதால் இவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு பிரச்சினைகள் தரக்கூடிய அனைத்து விஷயங்களும் நம்மை விட்டு விலகி ஓடும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பிரச்சனைகள் தரக்கூடிய விஷயங்களாகவும், பெரிதும் நம்முடைய வாழ்க்கையை பாதிக்கக் கூடியதாகவும் திகழக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் விலகி ஓடுவதற்கு பைரவரை அஷ்டமி திதி அன்று வழிபடும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நமக்கு பிரச்சினைகள் தரக்கூடிய எதிரிகளாக இருந்தாலும், நம்முடைய வாழ்க்கையை பாதிக்கக்கூடிய தீய சக்திகளாக இருந்தாலும் அவை அனைத்தையும் விரட்டி அடிப்பதோடு மட்டுமல்லாமல் நமக்கு காவல் தெய்வமாக திகழக்கூடியவர் தான் கால பைரவர். சனீஸ்வர பகவானின் ஆசானாக இவர் திகழ்கிறார். இவரை நாம் முறையாக வழிபடும் பொழுது எதிரிகள் தொல்லை நீங்கும். தீய சக்திகள் அனைத்தும் விலகி ஓடும். சனிபகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கும் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். அப்படிப்பட்ட காலபைரவரை அஷ்டமி திதியில் வழிபடும் ஒரு எளிமையான முறையைப் பற்றி பார்ப்போம்.
இன்றைய தினம் மாலை 5 மணி வரை அஷ்டமி திதி என்பது இருக்கிறது. 5 மணிக்குள் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு செல்லுங்கள். அங்கு கண்டிப்பான முறையில் காலபைரவருக்கு என்று தனியாக ஒரு சன்னதி இருக்கும். அந்த காலபைரவரை சென்று வழிபாடு செய்ய வேண்டும். கால பைரவருக்கு என்று தனியாக ஆலயம் இருக்கும் பட்சத்தில் அங்கு சென்று வழிபாடு செய்வது மேலும் சிறப்புகளை தரும். அப்படி வழிபாடு செய்யும் பொழுது புள்ளி இல்லாத நல்ல எலுமிச்சம் பழமாக பார்த்து மூன்று எலுமிச்சம் பழங்களை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்.
இதோடு சிவப்பு நிற மலர்கள் மற்றும் மரிக்கொழுந்து போன்றவற்றையும் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். அடுத்ததாக வழக்கம் போல் எந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்தீர்களோ அந்த தீபத்திற்குரிய பொருட்களையும் வாங்கிக் கொண்டு செல்லுங்கள். இந்த எலுமிச்சம் பழங்களை கால பைரவரின் பாதத்தில் வைக்கச் சொல்லித் தர வேண்டும். மலர்களையும் அவருக்கு அணிவிக்க சொல்ல வேண்டும். அடுத்ததாக அவருக்கு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு உங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறதோ அவை அனைத்தையும் கூறி அவை அனைத்தும் விலக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
இப்படி வேண்டி முடித்த பிறகு அந்த எலுமிச்சம் பழங்களை வாங்காமல் வீட்டிற்கு திரும்பி வந்து விட வேண்டும். இந்த முறையில் நம்முடைய கைப்பட எலுமிச்சம் பழங்களை வாங்கி கால பைரவருக்கு தருவதன் மூலம் நம்மை பிடித்திருக்கக் கூடிய தீய சக்திகள் விலகும், வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் விலகும், தொழில் மற்றும் வேலையில் இருக்கக்கூடிய தடைகளும், எதிரிகளும் விலகி ஓடுவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். மேலும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
இதையும் படிக்கலாமே:சகல ஐஸ்வர்யம் தரும் வளர்பிறை அஷ்டமி வழிபாடு
இந்த எளிமையான எலுமிச்சம் பழ வழிபாட்டை அருகில் இருக்கக்கூடிய காலபைரவரின் சன்னதியில் செய்பவர்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான துன்பங்களும் நீங்கி நன்மைகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.