- Advertisement -

ஒருவருக்கு நன்மைகள் நடைபெறுவதாக இருந்தாலும் தீமைகள் நடைபெறுவதாக இருந்தாலும் அவர்களுடைய கர்ம வினைகளை காரணமாக திகழ்கிறது. இதோடு மட்டுமல்லாமல் அவர்களை சுற்றி இருக்கக்கூடிய ஆற்றல்களும் ஒருவித காரணமாக அமைகிறது. நன்மைகள் நடைபெற வேண்டும் என்றால் நேர்மறை ஆற்றல்கள் இருக்க வேண்டும். தீமைகள் நடைபெறுகிறது என்றால் அவர்களை சுற்றி எதிர்மறை ஆற்றல்கள் இருக்கிறது என்று அர்த்தம்.

அப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றல்களை தான் நாம் தீய சக்திகள் என்று கூறுகிறோம். இந்த தீய சக்திகள் பல வழிகளில் நம்மிடமும் நம் வீட்டிலும் வருவது உண்டு. அப்படிப்பட்ட தீய சக்திகள் நம்மிடம் இருக்கும் பட்சத்தில் நமக்கு அனைத்துமே தவறுதலாகவே நடைபெறும். இந்த தவறுகளை மாற்றவும் தீய சக்திகளை நம்மிடம் இருந்து விரட்டவும் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

வீட்டில் இருக்கும் தீய சக்திகள் வெளியேற பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படுவது மஞ்சள் தூள். வெள்ளிக்கிழமை அன்றுதான் இந்த பரிகாரத்தை நாம் செய்ய வேண்டும். உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். அந்த நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய அம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது கடையிலிருந்து மஞ்சள் தூளை வாங்கிக்கொண்டு செல்லுங்கள்.

இந்த மஞ்சள் தூளை கோவிலுக்கு செல்லும் பொழுது தான் வாங்க வேண்டுமே தவிர்த்து முதல் நாளே வீட்டில் வாங்கி வைப்பது அல்லது வீட்டில் இருக்கும் மஞ்சள் தூளை எடுத்துக்கொண்டு செல்வதோ கூடாது. இவ்வாறு வாங்கிச் சென்ற மஞ்சள் தூளை அம்மனின் பாதங்களில் வைத்து மனதார வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடும் பொழுது தீய சக்திகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நீங்கள் உணர்ந்திருக்கும் பட்சத்தில் அந்த பாதிப்புகள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று மனதார வழிபாடு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு அந்த மஞ்சளை வீட்டிற்கு திரும்பவும் வாங்கி வரவேண்டும். வாங்கி வந்த இந்த மஞ்சள் தூளை உங்களுடைய வீட்டு பூஜை அறையில் இருக்கும் அம்மனின் படத்திற்கு முன்பாக வைத்து தீபம் ஏற்றி கற்பூர ஆரத்தி காட்டி வழிபட வேண்டும். பிறகு இந்த மஞ்சளை ஒரு கிண்ணத்தில் கொட்டி சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக குலைத்து ஓம் சக்தி என்று கூறியவாறு நிறைவாசல் முழுவதும் பூச வேண்டும்.

பொதுவாக நாம் நிலை வாசலில் மஞ்சள் வைப்பதாக இருந்தால் கீழே மட்டும்தான் பூசுவோம் அல்லது பக்கவாட்டு மூலையில் பூசுவோம். ஆனால் இப்படி நம்முடைய வீட்டில் தீய சக்திகளால் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை நம்மால் உணரும் பொழுது நாம் அந்த நிலை வாசல் முழுவதும் அதாவது செவ்வகமாக இருக்கும் நிலை வாசல் முழுவதும் ஓம் சக்தி என்று கூறியவாறு இந்த மஞ்சளை குழைத்து அப்படியே பூச வேண்டும்.

- Advertisement -

இப்படி நாம் பூசுவதன் மூலம் இந்த மஞ்சளானது நம்முடைய வீட்டிற்கு ஒரு பாதுகாப்பு கவசமாக திகழ்கிறது. மேலும் இந்த மஞ்சளை நாம் பூசுவதன் மூலம் நம் வீட்டிற்குள் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் வீட்டை விட்டு வெளியேறிவிடும். மேலும் புதிதாக எந்த வித தீய சக்திகளும் வீட்டிற்குள் வராது.

இதையும் படிக்கலாமே: மனநிம்மதியும் செல்வ செழிப்பும் உயர செய்ய வேண்டிய பூஜை

மிகவும் எளிமையான இந்த மஞ்சள் பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு அம்மனின் அருளால் தீய சக்திகள் விலகி ஓடும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -