- Advertisement -
வீட்டு குறிப்புகள்

பத்தே நிமிஷத்தில் தேங்காய் பாலில் இருந்து எண்ணெய் எடுக்க சூப்பர் டிரிக்ஸ் இருக்கு. அது எப்படின்னு தெரிஞ்சுக்கணுமா? இதோ அதற்கான டிப்ஸ்.

- Advertisement -

தேங்காய் எண்ணையை என்ன தான் நாம் கடையில் வாங்கி சமைத்தாலும் வீட்டில் நாம் அரைத்து எடுத்து சமைக்கும் போது கிடைக்கும் ருசியும், மன நிறைவும் வெளியில் காசு கொடுத்து வாங்கி செய்யும் போது கிடைக்காது. அதுவும் தேங்காய் எண்ணெய் இப்போது இருக்கும் விலைக்கும் நினைத்தால் பயமாக தான் இருக்கிறது. விலை அதிகம் என்று வாங்காமலும் இருக்க முடியாது. மாதத்தில் ஒரு முறை இது போல செய்து வைத்துக் கொண்டால் கூட போதும், நம் வீட்டிற்கு தேவையான எண்ணெயை நாமே செய்து எடுத்து வைத்து கொள்ளலாம். அதற்க்கான எளிய வழிமுறை பதிவு தான் இது.

முதலில் எண்ணெய் காய்ச்சுவதற்காக எடுத்து வைத்திருக்கும் தேங்காய்களை ஒரு அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இப்படி ஊற வைத்த பிறகு எடுத்து நறுக்கினால் தேங்காய் ஓட்டிலிருந்து ஈஸியாக வந்து விடும். அடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு அரைத்த தேங்காய் விழுது அனைத்தையும் வடித்து பாலை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அதை ஒரு பாக்ஸில் ஊற்றி மூடி போட்டு பிரீசரில் மூன்று மணி நேரம் வரை அப்படியே வைத்து விடுங்கள்.

இப்படி வைப்பதனால் பாலின் மேலே உள்ள கொழுப்புகள் அனைத்தும் மேலே வந்து தண்ணீர் மட்டும் அடியில் தனியாக நின்று விடும்.

- Advertisement -

இதையே நாம் அரைத்த உடன் அப்படியே ஊற்றி எண்ணெய் காய்ச்ச தொடங்கினால் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் எண்ணெய் பிரிந்து வர அதிக நேரம் எடுக்கும். இப்படி ஃப்ரீசரில் வைத்த பிறகு எடுத்து உபயோகிக்கும் போது சீக்கிரம் எண்ணெய் பிரிந்து வரும்.

இப்போது மேலே உள்ள கொழுப்புகளை எல்லாம் எடுத்து எண்ணெய் காய வைக்கும் சட்டியில் சேர்த்து காய வைத்தால் எண்ணெய் பிரிந்து மேலே சக்கை போல வந்து விடும்.

- Advertisement -

பிரிந்து வரும் போது அதன் மேலே ஒதுங்கும் சக்கைகளை தனியாக ஓரமாக ஒதுக்கி கொண்டே வரவேண்டும். இல்லை என்றால் சக்கையில் எண்னெயில் எண்ணெய் எல்லாம் சேர்ந்து வீணாகி விடும். அதுமட்டுமின்றி சீக்கிரம் அடி பிடித்தும் விடும்.

தேங்காய் கொழும்பு எடுத்த பிறகு மீதம் உள்ள தண்ணீரை மீண்டும் பிரேசரில் வைத்தால் இதே போல் மறுபடியும் கொழுப்பு மேலே திரண்டு அடியில் தண்ணீர் சேரும் அதையும் சேர்த்து ஒரு நீங்கள் எண்ணெய் காய்ச்ச பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவையெல்லாம் எடுத்த பிறகு மீதம் இருக்கும் தண்ணீரை கீழே ஊற்றி விட வேண்டாம். குருமா தேங்காய் அரைத்து ஊற்றி செய்யும் அனைத்து குழம்புகளிலும் இதை சேர்த்து செய்யலாம் குழம்பின் சுவை கூடுதலாக இருக்கும்.

- Advertisement -