
நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு பிரச்சனைக்கும் நம்முடைய கர்ம வினைகளே காரணம் என்று நம் அனைவருக்கும் தெரியும். அந்த கர்ம வினைகள் தீருவதற்குரிய வழியாக தான் தான தர்மங்கள் திகழ்கின்றன. அதிலும் யாருக்கு எந்த நேரத்தில் எப்படி தானம் செய்கிறோம் என்பதை பொறுத்து நம்முடைய கர்ம வினைகள் தீருவதற்கும் அதிர்ஷ்டம் ஏற்படுவதற்கும் உரிய வாய்ப்பு உண்டாக்கும். அந்த வகையில் புதன்கிழமை செய்யக்கூடிய ஒரு தானத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நம்முடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்பது ஏற்பட்டு விட்டால் நமக்கு இருக்கக் கூடிய கஷ்டங்கள் நம்மை விட்டு விலகும் என்றே கூறலாம். இந்த அதிர்ஷ்டம் என்பது உடனே ஏற்படாது. இதற்கு என்று சில வரைமுறைகள் இருக்கும். ஜாதகத்தின் மூலம் அதிர்ஷ்டம் ஏற்படும். ஜாதகம் சரியில்லாத சூழ்நிலையில் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்பட வேண்டும் என்றால் அதற்காக சில தான தர்மங்களை செய்ய வேண்டும். அப்படிப்பட்ட ஒரு தான தர்மத்தை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
இந்த தானத்தை புதன்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். புதன்கிழமை காலையில் வெறும் வயிற்றுடன் பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய கீரைகள், காய்கறிகள் அல்லது புல் வகைகள் இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய பசுமாட்டிற்கு சென்று அதற்கு உணவாக கொடுக்க வேண்டும். பிறகு பசுமாட்டின் நெற்றியிலும், பசுமாட்டின் பின்புறத்தில் இரண்டு கைகளையும் வைத்து தொட்டு வணங்க வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் நம்மை பிடித்திருக்கக் கூடிய தரித்திரம் முற்றிலும் நீங்கி அதிர்ஷ்டம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. இயன்றவர்கள் பசு மாட்டிற்கு முன்புறமும், பின்புறமும், கால்களிலும் மஞ்சள் குங்குமம் வைத்து மாலை சூட்டி வழிபாடு செய்யலாம். இந்த தானத்தை செய்யும் பொழுது காலில் செருப்பு அணிந்திருக்கக் கூடாது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ச்சியாக 16 புதன்கிழமைகள் செய்யும் பொழுது 16 செல்வங்களையும் பெறுவதற்குரிய அதிர்ஷ்டம் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
ஒரு வேளை தொடர்ச்சியாக இப்படி 16 வாரங்கள் செய்ய இயலவில்லை என்பவர்கள் பசுமாட்டிற்கு ஒரு வருடத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்கி கொடுப்பதற்குரிய பணத்தை செலுத்தியும் இந்த அதிர்ஷ்டத்தை பெற முடியும்.
இதையும் படிக்கலாமே:வேண்டுதல் அப்படியே நிறைவேற வாராகி வழிபாட்டு முறை
பசுமாட்டில் அனைத்து விதமான தெய்வங்களும் குடியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பசு மாட்டிற்கு இந்த வகையில் நாம் தானம் செய்து வழிபாடு செய்யும்பொழுது அனைத்து தெய்வங்களின் அருளையும் நம்மால் பெற முடியும். அதோடு அதிர்ஷ்டமும் நம்மை தேடி வரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.