- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவேண்டுதல் அப்படியே நிறைவேற வாராகி வழிபாட்டு முறை

வேண்டுதல் அப்படியே நிறைவேற வாராகி வழிபாட்டு முறை

- Advertisement -

இந்த உலகத்தில் பல தெய்வங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தெய்வம் இஷ்ட தெய்வமாக இருக்கும். அந்த தெய்வங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றல்கள் என்பதும் இருக்கும். அந்த வகையில் பலரது இஷ்ட தெய்வமாக திகழக்கூடியவர்தான் வாராகி அம்மன். வாராஹி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களையும், எதிரிகளையும் முற்றிலும் நீங்குவார்கள் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வாராகி அம்மனிடம் நாம் வேண்டுதல் வைக்கும் பொழுது அந்த வேண்டுதல் முழுமையாக நிறைவேற வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த பொருளை வைத்து வேண்டுதல் வைக்க வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

வாராகி வழிபாட்டு முறை

நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேண்டுதலை முன்வைத்து ஒவ்வொரு விதமான வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்வோம். அப்படி நாம் வழிபாட்டை செய்தும் அந்த வேண்டுதல் நமக்கு நிறைவேறவில்லை என்னும் பட்சத்தில் அந்த வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக சில சூட்சமமான வழிமுறைகளை பின்பற்றுவோம். அந்த வழிமுறைகளில் ஒன்றாக திகழ்வதுதான் இந்த ஒரு வழிமுறை. இதில் நாம் வாராஹி அம்மனிடம் வேண்டுதல் வைக்கும் பொழுது எந்த பொருளை கையில் வைத்துக் கொண்டு வேண்டுதல் வைக்க வேண்டும் என்பது பற்றி தான் பார்க்க போகிறோம்.

- Advertisement -

மார்கழி மாதம் 26 ஆம் தேதி ஏகாதேசி வருகிறது. அன்றைய தினம் சுவாதி நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது என்பதால் அன்றைய தினம் பெருமாளுக்கு மிகவும் உகந்த தினமாக கருதப்படுகிறது. பெருமாளின் அம்சத்தை கொண்டவராக திகழக் கூடியவர் தான் வாராகி அம்மன் என்பதால் அன்றைய தினத்தில் வாராகி அம்மனை நாம் வழிபாடு செய்யும்பொழுது நாம் வைக்கக்கூடிய வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அந்த வழிமுறையை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

இதற்கு நாம் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இதற்கு நமக்கு பெருமாளுக்கு உரிய துளசி இலைகள் வேண்டும். துளசி இலையை கையில் வைத்துக்கொண்டு வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு “ஓம் நமோ வாராகி தேவியே நமோ நமக” என்னும் மந்திரத்தை 111 முறை கூற வேண்டும். பிறகு வாராகி அம்மனின் படத்திற்கு முன்பாக இரண்டு நெய் தீபம் ஏற்றி வைத்து பனங்கற்கண்டை நெய்வேத்தியமாக வைத்து கையில் வைத்திருக்க கூடிய அந்த துளசி இலைகளை வைத்துக்கொண்டு உங்களுடைய வேண்டுதலை வாராகி அம்மனிடம் கூறினீர்கள் என்றால் அந்த வேண்டுதல் விரைவிலயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது. இயன்றவர்கள் அன்றைய தினம் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யலாம் அதே போல் வாராஹி அம்மன் படத்திற்கு துளசி மாலை சாட்சி வழிபாடு செய்வதும் நல்ல பலனைத் தரும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:செய்தொழிலில் முன்னேற வெள்ளெருக்கு பிள்ளையார் வழிபாடு

வேண்டுதல்கள் நிறைவேறுவதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் ஏகாதேசி திதியில் வாராஹி அம்மனை இந்த முறையில் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வேண்டுதல்கள் விரைவிலேயே நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்