
அன்றைய காலத்தில் சிறு வயதிலேயே திருமணம் நடத்தி வைத்தார்கள். நாட்கள் செல்ல செல்ல திருமணம் செய்யும் வயதின் வரம்பும் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இன்றைய காலகட்டத்தில் பலரும் திருமண வயதை கடந்த பிறகும் திருமணம் நடைபெறாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் செய்யக்கூடிய ஆலய தரிசனத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
திருமணம் தாமத பட்டுக் கொண்டு இருப்பவர்கள் தங்களுடைய திருமணம் விரைவிலேயே நடைபெற வேண்டும் என்பதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள். இந்த பரிகாரங்களை செய்வதற்கு முன்பாக திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காகவே செல்லக்கூடிய சிறப்பு மிகுந்த ஆலயங்கள் இருக்கின்றது. இந்த ஆலயங்களுக்கு செல்வதற்கு முன்பாக குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். இதோடு அபிராமி அந்தாதி பாடலையும் தினமும் பாராயணம் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் திருமணம் நடைபெறுவதில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கும்.
திருமண தடை ஏற்படுவதற்கு பரம்பரை சாபம் ஒரு காரணமாக இருக்கும். அப்படி சாபம் ஏற்பட்டு இருப்பின் அவர்கள் திருப்பதி செல்லும் வழியில் இருக்கக்கூடிய சீனிவாசமங்காபுரம் என்னும் ஊரில் இருக்கும் நித்திய கல்யாண பெருமாள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அந்த கோவிலில் பெருமாளுக்கு தினமும் திருமணம் நடைபெறும். அந்த திருமண வைபோகத்தில் கலந்து கொண்டு நித்திய பெருமாளை வழிபாடு செய்வதன் மூலம் விரைவில் அவர்களுக்கு இருக்கக் கூடிய சாபங்கள் நீங்கி விரைவிலேயே திருமணம் நடைபெறும்.
ஒருவருடைய ஜாதகத்தில் சனி பகவான் பார்க்கும் பார்வையால் திருமணம் தடை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சனிபகவான் 5, 7, 8 அல்லது லக்னத்தை பார்த்தாலோ அல்லது இருந்தாலோ அவர்களுக்கு திருமண தாமதம் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் இருக்கக்கூடிய விலங்குளம் ஊரில் அட்சயபுரீஸ்வரர் கோவில் இருக்கிறது.
அங்கு இருக்கக்கூடிய சனிபகவானை வழிபட வேண்டும். இந்த கோவிலில் இருக்கும் சனிபகவான் மனைவியுடன் மங்கல சனீஸ்வரராக திகழ்கிறார். இவரை சென்று வழிபடுவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் மங்களங்கள் உண்டாகும். அதனால் விரைவிலேயே திருமணம் நடைபெறும்.
திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்கு மிகவும் பரிச்சயமான தலமாக திகழ்வது தான் திருமணஞ்சேரி. திருமணஞ்சேரி வழிபாடு செய்வதன் மூலமும் விரைவிலேயே திருமணம் நடைபெறும். ஆலயங்களுக்கு செல்ல இயலாது என்ற சூழ்நிலையில் இருப்பவர்களோ அல்லது வெளிநாட்டில் வசிப்பவர்களோ அபிராமி அந்தாதியில் இருக்கக்கூடிய 35ஆவது பாடலை தினமும் பாராயணம் செய்து வர விரைவிலேயே திருமணம் கைகூடும்.
பாடல்
திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண் இறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ தரங்கக் கடலுள்
வெங் கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே
இதையும் படிக்கலாமே: எதிர்மறை ஆற்றலை விலக்கி உடல் சக்கரத்தை இயக்க வைக்க
இந்த அபிராமி அந்தாதி பாடலை மனம் உருகி தினமும் பாடி இந்த ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்பவர்களுக்கு விரைவிலேயே திருமணம் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.