- Advertisement -

ஒவ்வொரு செயலும் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்றால் அதற்குரிய முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சிகள் வெற்றியடைய வேண்டும் என்றால் அதற்குரிய வழிபாடுகளை நாம் செய்ய வேண்டும். எந்த அளவுக்கு முயற்சிகள் முக்கியமோ அதே அளவிற்கு தெய்வ வழிபாடு முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. இவை இரண்டும் ஒரு சேர இருந்தால்தான் அந்த காரியத்தில் வெற்றிகள் என்பது ஏற்படும். அப்படி வழிபாடு செய்யும் பொழுது சில மந்திரங்களையும் நாம் உச்சரிப்போம். அந்த வகையில் பணம் அதிக அளவில் சேர வேண்டும் என்று நினைப்பவர்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

திருவோண நட்சத்திர மந்திரம்

பணம் தொடர்பான அனைத்து தேவைகளும் பூர்த்தியாக வேண்டும் என்றால் நாம் அதற்குரிய முயற்சிகளை செய்ய வேண்டும். அந்த முயற்சிகளோடு சேர்ந்து தெய்வ வழிபாட்டையும் நாம் மேற்கொண்டோம் என்றால் அதன் பலன் இன்னும் அதிகமாக இருக்கும். அப்படி நம்முடைய பண தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய தெய்வமாக திகழ்பவர் தான் மகாலட்சுமி தாயார்.

- Advertisement -

மகாலட்சுமி தாயாரை நாம் வழிபடுவதை விட பெருமாளை வழிபடுவதன் மூலம் நமக்கு அதிக பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பெருமாளுக்கு பல உகந்த தினங்கள் இருக்கிறது. அவற்றுள் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழக்கூடியது தான் திருவோண நட்சத்திரம். திருவோண நட்சத்திரத்தன்று நாம் பெருமாளை வழிபடுவதன் மூலம் நமக்கு பல நன்மைகள் உண்டாகும்.

அப்படிப்பட்ட திருவோண நட்சத்திரம் ஜூன் மாதம் 24 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் நாம் ஒரே ஒரு மந்திரத்தை கூறி வழிபட்டோம் என்றால் நமக்கு பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். இந்த மந்திரத்தை நாம் திருவோண நட்சத்திர நாள் அன்று மாலை நேரத்தில் வீட்டில் பூஜையறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டோ அல்லது நின்று கொண்டோ இந்த மந்திரத்தை கூறலாம். ஒரே ஒரு முறை கூறினால் போதும் ஆனால் முழு மனதுடன் முழு நம்பிக்கையுடன் கூற வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம்.

மந்திரம்

ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

- Advertisement -

இது திருவோண நட்சத்திரத்துக்குரிய மந்திரம் ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரம் வரும் பொழுதெல்லாம் இந்த மந்திரத்தை வீட்டில் மாலை நேரத்தில் விளக்கேற்றி வைத்து இந்த மந்திரத்தை தொடர்ச்சியாக கூறி வர நமக்கு பணத்தேவைகள் என்பது பூர்த்தியாகும். பண வரவிற்குரிய முயற்சிகளை நாம் மேற்கொள்ளும் பொழுது அந்த முயற்சிகள் வெற்றி அடையும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: திருவோண நட்சத்திர மந்திரம்

எந்த ஒரு மந்திரத்தை நாம் கூறுவதாக இருந்தாலும் முழு மனதுடனும் முழு நம்பிக்கையுடனும் கூறினோம் என்றால் தான் அதன் பலனை நம்மால் உணர முடியும். திருவோண நட்சத்திர நாளன்று இந்த மந்திரத்தை கூறி பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -