ஒரு சில தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நமக்கு அவசரப் பண தேவை வரும். யாரிடம் போய் கடன் கேட்டாலும் இல்லை இல்லை என்று சொல்லுவார்கள். அடமானம் வைக்க நகையும் இருக்காது. இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொள்வோம். அதிலும் குறிப்பாக மருத்துவ செலவுக்கு பணம் தேவை என்றால் சொல்லவே வேண்டாம். நம்முடைய நிலைமை ரொம்பவும் மோசமாக போய்விடும்.
பெண்ணுக்கு திருமணம் வைத்திருப்பார்கள், குறித்த நேரத்தில் பணம் கைக்கு வந்து சேர்ந்திருக்காது. லோன் போட்டு இருக்கும். ஆனால் லோன் சேங்ஷன் ஆகவில்லை என்ற கஷ்டம் சில பேருக்கு இருக்கும். இப்படி கடைசி நேரத்தில் கையில் பணம் வந்து சேராமல் கஷ்டப்படும் சூழ்நிலையில், அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வீசவும், அந்த பணம் உங்கள் கையை வந்து சேரவும், என்ன செய்வது.
இதற்கு ஆன்மீகத்தில் ஒரு குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ஷ்ட குறியீடை நீங்கள் வரையும் பட்சத்தில் பணம் தானாக உங்களை நோக்கி வரும். அந்த குறியீடு எப்படி இருக்கும் என்பது மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பார்த்தாலே உங்களுக்கு தெரிந்திருக்கும்.
பணம் தரும் குறியீடு
பணப் பிரச்சனைகள் தீர அந்த குறியீட்டை எந்த முறையில் வரைய வேண்டும் என்பதைப் பற்றிய விரிவான தகவலை தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது என்றால் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு மகாலட்சுமியே பிரார்த்தனை செய்து இந்த குறியீட்டை வரையலாம்.
அதற்கு வாய்ப்பு இல்லை என்பவர்கள் வீட்டிலேயே கிழக்கு பார்த்தவாறு அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு, இந்த குறியீட்டை வரையவும். ஒரு பச்சை நிற பேனாவை எடுத்து, இடது கை கடிகாரம் கட்டக்கூடிய இடத்தில், இடது உள்ளங்கைக்கு கீழ் பக்கத்தில் இந்த குறியீட்டை வரைந்து கொள்ளுங்கள்.
அந்த குறியீடு வெளியே தெரியாமல் கை கடிகாரம் கட்டிக் கொள்ளலாம் தவறு கிடையாது. இந்த மாதிரி கையில் இந்த குறியீட்டை வரைந்து வைத்துக் கொண்டால் தினம் தினம் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். அன்றாட தேவைக்கு பணம் இல்லை என்ற சூழ்நிலை வராது.
ஒரு வெள்ளை நிற காகிதத்தில், மஞ்சளால் இந்த குறியீட்டை வரைந்து, அதற்கு கீழே உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை இருக்கிறதோ அந்த பணத்தை எழுதி மடித்து பீரோவில் வைத்தால் பீரோவில் நிறைய பணம் சேரும் என்பதும் நம்பிக்கை. இந்த பேப்பரை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு பேங்கில் கடன் கேளுங்கள் உடனே கிடைக்கும்.
இந்த பேப்பரை அப்படியே அடமானம் வைத்த சொத்து டாக்குமெண்டில் வைத்தால் அடமானம் வைத்த சொத்து சீக்கிரம் மீட்டெடுக்கலாம். நகை அடமானத்தில் வைத்த ரசிதோடு இந்த குறியீட்டை வைத்தால் அந்த நகையை சீக்கிரம் மீட்டு எடுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
ரொம்பவும் அவசர பண தேவை நாளை இந்த ரொக்கம் என் கையில் வந்தால் ரொம்ப ரொம்ப மன நிம்மதி என்ற சூழ்நிலை உங்களுக்கு நிலவுகிறது எனும் பட்சத்தில், ஒரு பிரியாணி இலை எடுத்துக் கொள்ளுங்கள். ஓரளவுக்கு கிழிசல் இல்லாத, பெரிய அளவில் இருக்கும் பிரியாணி இலையை எடுத்தால் தான் இந்த குறியீட்டை சிரமம் இல்லாமல் வரைய முடியும்.
ஒரு பச்சை நிற பேனாவில் இந்த குறியீட்டை, பிரியாணி இலையில் வரைந்து உள்ளங்கைகளில் வைத்து, எப்படியாவது பணம் என் கைக்கு வந்து சேர வேண்டும், பண தேவை பூர்த்தியாக வேண்டும் என்று பிரபஞ்சத்திடம் பிரார்த்தனை வைத்தால் அந்த பணம் உங்களை வந்து சேரும். ஒரு சில பேருக்கு இந்த குறியீடு உடனடியாக வேலை செய்யும்.
இதையும் படிக்கலாமே: எதிரிகள் விலகி ஓடவும் நினைத்த காரியம் நினைத்தபடி நடைபெறவும் காளியம்மன் வழிபாடு
ஒரு சில பேருக்கு இந்த குறியீடு வேலை செய்வதற்கு கொஞ்சம் தாமதமாகும். உடனே வருத்தப்பட்டு மனசு உடைய வேண்டாம். விடாமல் முயற்சி செய்து கொண்டே இருங்கள். பணம் கட்டாயம் உங்களை தேடி வரும். பண தேவை பூர்த்தியான பிறகு இந்த பிரியாணி இலையை நெருப்பில் போட்டு பொசுக்கி விடுங்கள். ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறவும்.