- Advertisement -

திருப்பதியில் வணங்க வேண்டிய தெய்வங்கள்

- Advertisement -

பலரும் செல்வந்தராக வேண்டும், பணம் வரவு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக மாதத்திற்கு ஒரு முறையோ, வருடத்திற்கு ஒரு முறையோ திருப்பதிக்கு சென்று திருப்பதி பெருமாளை வழிபட வேண்டும் என்று நினைப்பார்கள். பலரும் அந்த வழிபாட்டை செய்வார்கள். பலருக்கு திருப்பதி செல்ல வேண்டும் என்று நினைத்தாலும் ஏதாவது ஒரு தடைகள் ஏற்பட்டு அவர்களால் செல்ல முடியாத ஒரு சூழ்நிலை உண்டாகும். இன்னும் சிலருக்கோ கஷ்டப்பட்டு திருப்பதிக்கு சென்று வந்த பிறகு பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். திருப்பதிக்கு சென்று முழு பலனையும் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் திருப்பதிக்கு செல்லும் பொழுது எந்தெந்த இடங்களில் தரிசனம் செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

திருப்பதியில் வணங்க வேண்டிய தெய்வங்கள்

பொதுவாக திருப்பதிக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் நேராக திருப்பதிக்கு சென்று டோக்கனை எடுத்து பெருமாளை தரிசனம் செய்துவிட்டு லட்டை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து விடுவார்கள். நாங்களும் திருப்பதிக்கு சென்றோம் என்று அனைவரிடமும் லட்டை கொடுத்து சொல்லுவார்கள். அப்படி செய்வதன் மூலம் அவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது என்று தான் கூற வேண்டும்.

- Advertisement -

ஒவ்வொரு ஆலயத்திலும் சில இடங்களில் கண்டிப்பான முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்ற நியதி இருக்கும். அப்படி வழிபாடு செய்தால் தான் அவர்களுடைய வழிபாட்டிற்குரிய பலன் என்பது அவர்களை வந்தடையும். அந்த வகையில் திருப்பதிக்கு சென்றால் எந்தெந்த இடங்களில் யாரை வழிபட வேண்டும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக திருப்பதிக்கு செல்பவர்கள் திருப்பதி பெருமாளை வழிபடுவதைப் போலவே கீழே இருக்கும் அலமேலு மங்கையில் வீற்றிருக்கும் தாயாரையும் வழிபட வேண்டும். திருப்பதிக்கு செல்வதற்கு முன்பாகவும் வழிபடலாம், திருப்பதி சென்று முடித்து வீட்டிற்கு வரும் பொழுதும் வழிபாடு செய்யலாம். ஆனால் கண்டிப்பாக முறையில் அலமேலு மங்கையை வழிபாடு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் பெருமாளின் அருளை பரிபூரணமாக பெற முடியும்.

- Advertisement -

அடுத்ததாக திருப்பதி கோயிலுக்குள் நுழையும் பொழுது அங்கு மேலே ஒரு கடப்பாறை இருக்கும். அந்த கடப்பாறையை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த கடப்பாறையை தாண்டி கோவிலுக்குள் வந்த பிறகு கோவிலுக்குள் மண்டபம் இருக்கும். அந்த மண்டபத்தில் தளிகை போடும் இடத்தில் பெருமாள் இருப்பார். அந்த பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும். ஏனென்றால் அனைத்து விதமான தளிகையும் அந்த பெருமாளுக்கு தான் போடப்படுகிறது என்றும் அப்படிப்பட்ட திருமாலை நாம் வழிபடுவது கற்ப கிரகத்தில் இருக்கக்கூடிய பெருமாளை வழிபடுவதற்கு சமம் என்றும் கூறப்படுகிறது.

அடுத்ததாக கோவிலை சுற்றி வரும் பொழுது கோபுரத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் இருப்பார். அந்த ஸ்ரீனிவாச பெருமாளையும் நாம் வழிபாடு செய்யும்பொழுது அனைத்து விதமான செல்வங்களும் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் வெளியில் இருக்கும் குளத்துக்கு அருகே வராக மூர்த்தி கோவில் இருக்கும். அங்கு இருக்கக்கூடிய வராக மூர்த்தியை நாம் வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் அந்த மலைக்கு சொந்தக்காரராக திகழ்பவர் ஏழுமலையான் கிடையாது. அந்த ஏழு மலைகளுக்கும் சொந்தக்காரனாக திகழக்கூடியவராக வராக மூர்த்தியை நாம் வழிபடாமல் வீட்டிற்கு வந்தோம் என்றால் நமக்கு திருப்பதி சென்றதற்குரிய பலன் எதுவுமே கிடைக்காமல் போய்விடும்.

இதையும் படிக்கலாமே:கடன் தீர புதன்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

திருப்பதி சென்ற முழு பலனையும் பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த இடங்களில் இருக்கக்கூடிய பெருமாளை முழு மனதோடு வழிபாடு செய்ய அனைத்து விதமான பலன்களும் பெறுவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -