- Advertisement -

பெண்களின் மீது வீசக் கூடாத வாசனையா! சாமுத்ரிகா லட்சணம் என்ன சொல்லுகிறது?

அந்த காலத்தில், நம் முன்னோர்கள் எல்லாம் பெண்களை பார்க்கும் போது, ‘இந்தப் பெண் சாமுத்திரிகா லட்சணதோடு’ இருக்கின்றாள் என்று ஒரு வார்த்தையை கூறுவார்கள். இந்த சாமுத்ரிகா லட்சணம் என்ற வார்த்தையை நம்மில் பலபேர் கேள்வி பட்டிருப்போம். ஆனால், சாமுத்திரிகா லட்சணத்தை பற்றி ஒரு பதிவில் முழுமையாக தெரிந்துகொள்ள முடியாது. அது ஒரு பெரிய சாஸ்திர குறிப்பு என்றே கூறலாம். சாமுத்திரிகா லட்சணம் என்பது பெண்களுக்கும் உண்டு. ஆண்களுக்கும் உண்டு. ஒரு மனிதனின் அங்கமானது எப்படி இருக்க வேண்டும், எப்படி இருந்தால் எந்த குணாதிசயங்களை கொண்டிருப்பார்கள், என்பதை பற்றிய குறிப்புகளை சொல்லும் சாஸ்த்திர குறிப்பு தான் சாமுத்திரிகா லட்சணம் என்று கூறுவார்கள். சாமுத்திரிகா லட்சணப்படி ஒரு பெண்ணின் மீது வீச வேண்டிய வாசனை எது? வீசக்கூடாத வாசனை எது? என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

எல்லாப் பெண்களும், எல்லா சாமுத்ரிகா லட்சணத்தையும் பெற்றுவிட முடியாது. ஒவ்வொரு பெண்ணுக்கு ஒவ்வொன்று அழகு என்றே கூறலாம். எல்லா சாமுத்திரிகா லட்சணமும் பெற்றிருந்தால், அவள் தேவலோகத்தில் உள்ள தேவதை என்றுதான் கூற வேண்டும். அதற்காக பூலோகத்தில் இருக்கும் பெண்கள் எல்லாம் அழகு இல்லை என்று சொல்லப்படவில்லை! ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு தனித்துவம் கட்டாயம் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

- Advertisement -

பெண்ணின் கூந்தலுக்கு கூட இயற்கையாகவே மணம் உண்டு என்று சொல்வார்கள் அல்லவா? இந்த வரிசையில் ஒரு பெண்ணின் மேல் வீசக்கூடாத வாசனையாக 3 வாசனைகள் சொல்லப்பட்டுள்ளது. வேம்பு வாசனை, கற்றாழை வாசனை, மாமிச வாசனை. கட்டாயம் ஒரு பெண்ணின் மீது இந்த 3 வாசனைகள் வீசக் கூடாது என்று சொல்கிறது சாமுத்திரிகா லட்சணம். இயற்கையாகவே சில பெண்களின் மீது இந்த வாசம் வீசினால் அவர்களுக்கு என்ன பிரச்சனை வரும் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

இயற்கையாகவே இந்த வாசத்தை கொண்ட பெண்கள் பெரும்பாலும் தோல்வியை சந்திக்கலாம். திருமணத்தடை உண்டாகும். இப்படிப்பட்ட பெண்களுக்கு நட்பு வட்டாரம் அதிகமாக இருக்காது. அதாவது துர்நாற்றம் வீசினால் நம் அருகில் வருவதற்கே சங்கோஜப்படுவார்கள் அல்லவா? அப்படி வைத்துக் கொள்ளலாம். அதாவது இயற்கையாகவே எவரொருவர் நறுமணத்தோடு இருக்கின்றாரோ, அவரிடம்தான் நேர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படும். நம்மீது கெட்ட வாடை வீசும் போது, நமக்கே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். இப்படியிருக்க நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு நம்மீது வரக்கூடிய வாசனை மூலம் எந்தவித சங்கடமும் ஏற்பட்டு விடக்கூடாது.

- Advertisement -

ஆனால் இந்த பிரச்சனை ஒன்றும் தீர்க்க முடியாத பிரச்சினை அல்ல. பெண்கள் தினந்தோறும் குளிக்கும்போது, இதற்காகத்தான் கஸ்தூரி மஞ்சள், அல்லது சாதாரண மஞ்சளை உடம்பு முழுவதையும் தேய்த்து குளிக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லுவார்கள். அரகஜா, ஜவ்வாது, புனுகு, ரோஸ் வாட்டர் போன்ற வாசனைத் திரவியங்களைக் கலந்து குளித்து வரும்போது இந்த மோசமான 3 வாசனைகள் நம் உடம்பை விட்டு நிரந்தரமாக வெளியேறிவிடும்  என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

சரி. பெண்களின் மீது வீசக் கூடிய வாசனை என்றால் அது என்னென்ன என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாமா? பெண்கள் என்றாலே பொதுவாக வாசனை பூக்களைச் சூடிக் கொள்ள வேண்டும். அவர்கள் மீது வாசனையுள்ள பூக்களின் வாசம் வீசலாம். இதுமட்டுமல்லாமல் திருநீறு, குங்குமம், மஞ்சள், சந்தனம் போன்ற மங்களகரமான பொருட்கள் கலந்த வாசனை வீசுவது மிகவும் நல்லது.

- Advertisement -

எது எப்படியாக இருந்தாலும், மாடாக உழைத்து, ஓடாக தேய்ந்து தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும், அவர்கள் மீது வரும் வியர்வை வாசனையும் எந்த விதத்திலும் குறைந்தது அல்ல என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நம்முடைய வீட்டில் ஐஸ்வர்யம் நிறைந்திருக்க வெற்றிலை கொடியை இப்படித்தான் வளர்க்க வேண்டுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Samuthrika latchanam female in Tamil. Samuthrika latchanam. Samuthrika latchanam Tamil. Samuthrika latchanam Female. Samudrika lakshanam in Tamil.

- Advertisement -