நம்முடைய வீட்டில் ஐஸ்வர்யம் நிறைந்திருக்க வெற்றிலை கொடியை இப்படித்தான் வளர்க்க வேண்டுமா?

vetrilai-mahalakshmi

பொதுவாகவே வீட்டில் வெற்றிலை கொடியை வளர்க்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் நம்மில் பல பேருக்கு இருக்கும். சிலபேர் வெற்றிலை கொடியை வீட்டில் வைத்து வளர்க்க கூடாது என்று சொல்வார்கள். இதற்கு காரணம் வெற்றிலை கொடி இருக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். தீட்டு பட்டாலோ, சுத்தபத்தமாக இல்லை என்றாலோ வெற்றிலை கொடி வாடிவிடும். வீட்டில் வெற்றிலையானது வாடினால் கஷ்டம் தரும். இதனால்தான் வெற்றிலை கொடியை வீட்டில் வைத்து வளர்ப்பதற்கு, கொஞ்சம் பயப்படுவார்கள். இருப்பினும் ஐஸ்வர்யம் நிறைந்திருக்க வெற்றிலை செடியை வீட்டில் வைத்து வளர்க்கலாம் என்று சொல்கிறது சில சாஸ்திர குறிப்புகள்.

vetrilai

ஆன்மிகத்திற்கு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் இந்த வெற்றிலையானது மிகவும் நல்லது என்பதால், வீட்டில் வைத்து வளர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக வைத்து வளர்க்கலாம். ஆனால் துளசி செடியை எப்படி பயபக்தியோடு பராமரிக்க வேண்டுமோ அதேபோல்  வெற்றிலை கொடியையும் பராமரிக்க வேண்டும் என்ற விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கவும், கடன் பிரச்சனை தீரவும், செல்வ செழிப்பு மேலோங்கி கொண்டே செல்லவும், முறைப்படி வெற்றிலை கொடியை வீட்டில் எப்படி வைக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

உங்களுடைய வீட்டில் தோட்டம் இருந்து, இடவசதி இருந்தால் தோட்டத்திலேயே ஈசானிய மூலையில் அதாவது, வடகிழக்கு மூலையில் வெற்றிலை கொடியை வைத்துக்கொள்ளலாம். வீட்டில் இடம் இல்லாதவர்கள் கொஞ்சம் பெரிய அளவு தொட்டியாக வாங்கி வைத்து, வீட்டிற்குள்ளேயே ஈசானிய மூலையில் அந்த தொட்டியை வைத்து வெற்றிலை கொடியை வளர்த்து வரலாம்.

one rupee

வெற்றிலை கொடியை பதியம் போடுவதற்காக பள்ளம் தோண்ட வேண்டும் அல்லவா? அப்படி தோண்டப்படும் பள்ளத்திற்குள் மூன்று 1 ரூபாய் நாணயங்களை, போட வேண்டும். அதன் பின்பு சிறிதளவு மஞ்சள், குங்குமத்தையும் போட வேண்டும். இப்படி மஞ்சள் குங்குமத்தை போடும்போது மகாலக்ஷ்மியை மனதார நினைத்துக் கொள்வது அவசியம். ஒரு பௌர்ணமி தினத்தில் வெற்றிலை கொடியை பதியம் போடுவது மிகவும் சிறப்பானது.

- Advertisement -

இந்த வெற்றிலைக் கொடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றும்போதும் மகாலட்சுமியை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். வெற்றிலைக் கொடிகள் வளர்ந்து தழைத்து எவ்வளவு செழிப்பாக வளர்கிறதோ, அந்த அளவிற்கு நம்முடைய வீட்டின் செல்வ வளமும் வற்றாமல் வளர்ந்து கொண்டே செல்லும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இது மட்டுமல்லாமல் வெற்றிலைக்கொடி எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டில் கெட்ட சக்தி அண்டாது என்பதும் உண்மைதான்.

vetrilai-kodi

வீட்டில் வெற்றிலை கொடியை வைத்து வளர்த்து, பராமரித்து வருவது மிகவும் நல்லது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அந்த வெற்றிலை கொடியானதுவீட்டில் வாடக் கூடாது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
கோடீஸ்வர யோகம் உங்களைத் தேடி வர வேண்டுமா? இந்த ஒரு வேரை, உங்கள் வீட்டு வாசலில் கட்டி தொங்க விட்டால் போதுமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vetrilai kodi valarpathu eppadi. Vetrilai kodi in Tamil. Vetrilai plant in Tamil. Vetrilai chedi valarpu. Vetrilai chedi valarpathu eppadi.