
பெண்கள் என்ன தான் நாகரிகமாக மாறினாலும் சில விஷயங்களை அவர்களால் மற்றவர்களுடன் பகிர சற்று தயக்கம் கொள்ளத் தான் செய்கிறார்கள். அப்படி வெளியில் கூற முடியாத பிரச்சனைகளில் ஒன்று தொடை பகுதிகளில் உள்ள கருமை நிறம். இதை பெண்களே மற்றொரு பெண்ணிடம் சரி செய்வதற்கான வழியைக் கேட்க கூச்சப்படுகிறார்கள். அதனாலயே சிலர் இதை சரி செய்யாமலே விட்டு விட்டு அந்த இடமே கருத்து தடித்துப் போகும் அளவிற்கு, ஏன் ஒரு சிலருக்கு புண்ணாக கூட மாறியிருக்கும்.
இந்தப் பிரச்சனையை தீர்க்க ஐந்து ரூபாய் செலவிலான ஒரு பொருளை மட்டும் வாங்கினால் போதும். உங்கள் தொடைப்பகுதியில் உள்ள கருமையை நீங்கி தோலும் மென்மையாகவும், வெண்மையாகவும் மாறிவிடும்.
அதற்கு முதலில் ஒரு பவுலில் 2 ஸ்பூன் நன்றாக புளித்து தயிரை எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு இதில் ஒரு உருளைக்கிழங்கை நன்றாக துருவி சேர்த்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை அரைக்க கூடாது. துருவி தான் சேர்க்க வேண்டும். பிறகு இதில் நாம் சேர்க்கும் பொருள் தான் இந்த கருமையை நீக்க தேவைப்படும் முக்கியமான ஒன்று. அது வேறொன்றுமில்லை கசகசா தான்.
இது 5 ரூபாய் பாக்கெட்களில் கூட கடைகளில் கிடைக்கிறது. அதில் ஒன்றை வாங்கி, ஒரு பாக்கெட் அளவிற்கு இதில் சேர்த்தால் போதும். இவை எல்லாம் கலக்க தண்ணீர் ஊற்றக்கூடாது. இதிலிருக்கும் தயிர் மற்றும் உருளை கிழங்கு சாறில் தான் இதை கலக்க வேண்டும். பின் இதில் 1 ஸ்பூன் அளவுக்கு அரிசி மாவவையும் நன்றாக கலந்து, ஐந்து நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். கசகசா தயிர் உருளைக்கிழங்கு இவை அனைத்தும் இந்த அரிசி மாவுடன் நன்றாக ஊறி இருக்கும். இதை உங்கள் தொடை பகுதியில் நன்றாக தேய்க்க வேண்டும். இது துணிகளில் ஒட்டாமல் பார்த்து கொள்ளுங்கள்.
அதுமட்டுமில்லாமல் தேய்ந்து சில நிமிடங்கள் அந்த இடத்தை காய விட வேண்டும். ஆகவே நீங்கள் குளிக்கும் போது இதை செய்தால்தான் சரியாக இருக்கும். குளிக்கும் போது கருமை உள்ள இடத்தில் இதை அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு பத்து நிமிடம் கழித்து எப்போதும் போல் நீங்கள் குளித்து விடலாம். இதை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் போதும், உங்களின் தொடையில் உள்ள கருமை நிறம் மாறிடும். தொடை பகுதி மட்டும் அல்லாமல், உங்களுடைய அக்குள் பகுதி கருப்பாக இருந்தாலும், உங்களுடைய உடம்பில் வேறு எந்த மற்ற பாகங்களில் அடர் கருப்பு நிறத்தில் இருந்தாலும், அந்த இடத்தில் இந்த பேக்கை பயன்படுத்தலாம்.
இந்த கசகசாவும் உருளைக்கிழங்கும் உங்கள் தோலின் நிறத்தை மாற்றிவிடும். கருமை நிறம் மாறினாலும் அந்த இடம் கடினமாக இருக்கும். அந்த இடத்தை இந்த தயிர் மென்மையாக்கி உங்கள் சருமத்தை மாற்றும். அரிசி மாவை நீங்கள் அப்ளை செய்யும் போது அது ஒரு நல்ல ஸ்க்ரப்பர் போன்று செயல்படும். இதை தொடர்ந்து செய்து வாருங்கள். நிச்சயம் உங்கள் தோலின் நிறம் மாறிவிடும்.