- Advertisement -
- Advertisement -

செய்யும் தொழிலில் எப்போதும் ஒரே மாதிரியான லாபத்தை நாம் சம்பாதிக்க முடிவதில்லை. ஒவ்வொரு சமயத்தில் நல்ல அதிர்ஷ்டமும், கடவுளின் ஆசீர்வாதமும் நம் பக்கம் இருப்பது போல, லாபத்தை அதிகமாக சம்பாதித்து இருப்போம். ஆனால் சில சமயத்தில் திடீரென அப்படியே முடக்கி போட்டு விடும். தொழில், வியாபாரம், வேலை நிமித்தமாக நீங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து கொண்டு இருந்தால் இந்த எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள், நல்ல விருத்தி உண்டாகும். செய்தொழிலில் லாபம் பார்க்க தாந்த்ரீக பரிகார முறையை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறோம்.

வியாபாரம் அல்லது தொழில் செய்பவர்கள் அமாவாசை தோறும் பூசணிக்காய் அல்லது தேங்காய் உடைத்து திருஷ்டி கழிப்பது முறையாகும். தொடர்ந்து இதுபோல ஒவ்வொரு அமாவாசையும் செய்து வர திருஷ்டி நீங்கி தடையில்லாத நல்ல லாபத்தை பார்ப்பீர்கள். பணத்தை வாங்கி போடும் கல்லாப்பெட்டி அல்லது எந்த இடத்தில் பணத்தை வைக்கிறீர்களோ அந்த இடத்தில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த பரிகாரம் செய்வதற்கு நாட்டு மருந்து கடைக்கு சென்று பெயர் சொல்லாத மருந்து என்று கேட்டு வாங்குங்கள். இந்த மருந்தை வாங்கும் பொழுது பெயரை சொன்னால், செய்யவிருக்கும் காரியம் பலிக்காது என்பது நம்பிக்கை ஆக இருந்து வருகிறது. அதன் பெயர்தான் வசம்பு! வசம்பை தெய்வீக சக்திகளை தன்னோடு உள்ளடக்கியுள்ள அற்புதமான மூலிகை என்று கூறலாம். சிறு குழந்தைகளுக்கு கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்கவும், வயிற்று வலி போன்ற தொந்தரவுகள் வராமல் இருக்கவும் விளக்கில் சுட்டு எரித்து அந்த கரியை பயன்படுத்துவார்கள்.

வெள்ளிக்கிழமையில் மாலை வேளையில், நல்ல நேரத்தில் பூஜை அறையில் அகல்விளக்கு ஒன்றை ஏற்றுங்கள். அதில் இந்த வசம்பை சுட்டு எரித்துக் கொள்ளுங்கள். தீபத்தில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றலாம், வேறு எதையும் பயன்படுத்த வேண்டாம். சுட்டு எரித்த இந்த சாம்பலுடன், தேவையான அளவிற்கு நெய் ஊற்றி மை போல கரைத்துக் கொள்ளுங்கள். இந்த மையை நீங்கள் ஒரு பத்து ரூபாய் நோட்டில் நான்கு முனைகளிலும் லேசாக தடவிக் கொள்ளுங்கள். மையப்பகுதியிலும் ஒரு சிறு பொட்டு ஒன்று வையுங்கள்.

- Advertisement -

இந்த பத்து ரூபாய் நோட்டை நான்காக மடித்து நீங்கள் பணத்தை சேமித்து வைக்கக்கூடிய கல்லாப்பெட்டி அல்லது எந்த இடத்தில் பணத்தை வைக்கிறீர்களோ, அந்த இடத்தில் பணத்துடன் சேர்த்து எப்போதும் போட்டு வைக்க வேண்டும். அந்த பத்து ரூபாய் நோட்டுடன் சிறிதளவு பச்சை கற்பூரத்தை நுணுக்கி சேர்க்க வேண்டும். பச்சைக் கற்பூரம், ஒன்றிரண்டு கிராம்பு, ரெண்டு ஏலக்காய், ஒரு பட்டை துண்டு ஆகியவற்றை சேர்த்து வையுங்கள்.

இதையும் படிக்கலாமே:
கர்ம வினை தீர பதிகம்

இதில் பணத்தை நீங்கள் போட போட தொழில் ரீதியான, வியாபார ரீதியான தடைகள் எதுவாக இருந்தாலும் அவை நீங்கி, தீய சக்திகளின் ஆற்றல் குறைந்து, மீண்டும் நல்ல லாபம் பார்க்கலாம். நலிந்த தொழிலும் இந்த எளிய தாந்த்ரீக பரிகாரத்தை செய்து பார்க்கும் பொழுது, நல்ல பலன் தெரியும். புதிதாக தொழில் துவங்குபவர்களும் இந்த பரிகாரத்தை செய்து வரலாம். அந்த ரூபாய் நோட்டு எப்பொழுதும் உங்கள் கல்லாப்பெட்டியில் இருக்க வேண்டும். அதனை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதுபோல தினமும் வேலை செய்ய ஆரம்பிக்கும் முன்பு மகாலட்சுமியை வணங்கி, அந்த மையை நெற்றியில் இட்டுக் கொண்டு வந்தால் உங்கள் வசம் சகலமும் சித்தியாகும்.

- Advertisement -