- Advertisement -

கர்ம வினை தீர பதிகம்

- Advertisement -

கர்ம வினைகள், முன் ஜென்ம பாவங்கள், தீராத பிணிகள் ஆகியவை நீங்க திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த பதிகம் ரொம்பவே சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. நான் அறியாமல் கூட எந்த பாவமும் செய்ததில்லை, கர்ம வினை பாவங்களால் தான் நான் இப்போது அவதிப்பட்டு கொண்டிருக்கின்றேன் என்பவர்கள், இந்த பதிகத்தை 48 நாட்கள் பாடினால், துரதிர்ஷ்டங்கள் அதிர்ஷ்டமாய் மாறும் என்பது ஐதீகம். இப்பதிகம் பாடும் முறையை இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.

இந்த பதிகத்தை 48 நாட்கள் தொடர்ந்து பாட வேண்டும். இடையில் இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பதிகம் பாடுவதற்கு எந்தவிதமான தீட்டும் இடையூறு கிடையாது எனவே தாராளமாக நீங்கள் பாடலாம். காலையில் அல்லது மாலையில் ஏதாவது ஒரு வேளையில் ஒரு முறை நீங்கள் பூஜித்து பாட வேண்டும். பூஜை அறையில் சிவன் படம் அல்லது முருகன் படத்தை வைத்து அதற்கு முன்பாக விளக்கேற்றி வையுங்கள். இப்பதிகம் பாடும் பொழுது பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது முறையாகும்.

- Advertisement -

கர்மவினை தீர திருஞானசம்பந்தர் அருளிய தேவார பாடல் வரிகள்:
1. மாது ஓர் கூறு உகந்து, ஏறு அது ஏறிய
ஆதியான் உறை ஆடானை
போதினால் புனைந்து, ஏத்துவார் தமை
வாதியா வினை மாயுமே!

2. வாடல் வெண் தலை அங்கை ஏந்தி நின்று
ஆடலான் உறை ஆடானை
தோடு உலாம் மலர் தூவிக் கைதொழ,
வீடும், நுங்கள் வினைகளே!

- Advertisement -

3. மங்கை கூறினன், மான்மறி உடை
அம் கையான், உறை ஆடானை
தம் கையால் தொழுது, ஏத்த வல்லார்
மங்கு நோய் பிணி மாயுமே!

4. சுண்ண நீறு அணி மார்பில் தோல் புனை
அண்ணலான் உறை ஆடானை
வண்ண மா மலர் தூவிக் கைதொழ
எண்ணுவார் இடர் ஏகுமே!

- Advertisement -

5. கொய் அணி(ம்) மலர்க்கொன்றை சூடிய
ஐயன் மேவிய ஆடானை
கை அணி(ம்) மலரால் வணங்கிட,
வெய்ய வல்வினை வீடுமே!

6. வான் இள(ம்) மதி மல்கு வார்சடை
ஆன் அஞ்சு ஆடலன் ஆடானை
தேன் அணி(ம்) மலர் சேர்த்த, முன் செய்த
ஊனம் உள்ள ஒழியுமே!

7. துலங்கு வெண்மழு ஏந்தி, சூழ் சடை
அலங்கலான், உறை ஆடானை
நலம் கொள் மா மலர் தூவி, நாள்தொறும்
வலம் கொள்வார் வினை மாயுமே!

8. வெந்த நீறு அணி மார்பில் தோல் புனை
அந்தம் இல்லவன் ஆடானை
கந்த மாமலர் தூவிக் கைதொழும்
சிந்தையார் வினை தேயுமே!

9. மறைவலாரொடு வானவர் தொழு
அறையும் தண்புனல் ஆடானை
உறையும் ஈசனை ஏத்த, தீவினை
பறையும்; நல்வினை பற்றுமே!

10. மாயனும் மலரானும் கைதொழ
ஆய அந்தணன் ஆடானை
தூய மா மலர் தூவிக் கைதொழ,
தீய வல்வினை தீருமே!

11. வீடினார் மலி வெங்கடத்து நின்று
ஆடலான் உறை ஆடானை
நாடி, ஞானசம்பந்தன் செந்தமிழ்
பாட, நோய் பிணி பாறுமே!

இதையும் படிக்கலாமே:
சக்தி வாய்ந்த மகா மந்திரம்

இப்பதிகத்தின் பாடல் வரிகளை பாடும் பொழுது வெள்ளை அரளி, குருந்து, சிவப்பு செம்பருத்தி ஆகிய மலர்களில் ஏதேனும் ஒன்றைக்கொண்டு கண்டிப்பாக அர்ச்சனை செய்ய வேண்டும். ஒவ்வொரு பாடல்கள் பாடும் பொழுதும், இந்த பூக்களை சிவன் அல்லது முருகனின் திருவடிகளில் அர்ச்சனை செய்துவிட்டு பாட வேண்டும். கர்ம வினை நீக்கும் இப்பதிகத்தில் 11 பாடல்கள் உள்ளன. 11 பாடல்களுக்கும் 11 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். 48 நாட்கள் பாடி வாருங்கள், நிச்சயம் நல்ல பலன் தெரியும்.

சற்று முன்