
எல்லோருக்குமே ஏதாவது ஒரு நிறம் மிகவும் பிடித்த நிறமாக இருக்கும் அந்த நிறத்தில் கட்டாயமாக ஒரு துணியாவது நாம் எடுத்து வைத்திருப்போம். இதை வாங்கும் போது இருக்கும் நிறம் இரண்டு மூன்று முறை போட்ட உடனே நிறம் மங்கி வேறு கலரில் மாறி விடும். பொதுவாக இது ஆண்களின் டிரஸ்களில் தான் அதிகமாக இது போல ஆகும். பெண்களின் ஷால், பிளவுஸ் போன்ற துணிகளும் அடிக்கடி இது போல நிறம் மாறி வேறு வாங்கி பயன்படுத்தும் நிலை வரும். இனி அப்படி ஆகாமல் இருக்க பழைய சாயம் போன துணிகளை புதிய துணிகளாக மாற்ற எளிய வழி உள்ளது. அதை தான் இப்போது இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
இதற்கு பழைய சாய துணி ஒரே நிறத்தில் உள்ளதாக இருக்க வேண்டும். அதாவது ஒரு டிரஸ் யில் இரண்டு நிறம் மூன்று நிறம் இருந்தால் இந்த முறை பயன் படுத்த முடியாது. ஒரே நிற டிரஸ் கருப்பு நிற, டிரஸ் நீல நிற டிரஸ், எதுவாக இருப்பினும் ஒரே நிறமாக இருந்தால் தான் நாம் இந்த முறையில் கையாள முடியும்.
இப்போது இந்த துணிகளுக்கு சாயம் போடுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம். முதலில் ஒரு துணி (சட்டை, பாண்ட், எதுவாக இருந்தாலும் சரி) எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் அந்த டிரஸ் மூழ்கும் அளவிற்கு ஒரு பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து இந்த தண்ணீர் பாத்திரத்தை அதில் வைத்து கொதித்தவுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு கல் உப்பை போட்டுக் கொள்ளுங்கள்.
கல் உப்பு போட்டு நன்றாக தண்ணீர் கொதிக்கும் போது சாய பவுடர் சேர்த்து கொள்ளுங்கள். (சாய பவுடர் என்று கடைகளில் கேட்டால் கிடைக்கும் பேன்சி ஸ்டோர்களில் கூட இந்த பவுடர் கிடைக்கும்). இதை வாங்கி அந்த தண்ணீரில் கொட்டி கொதித்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள்.
அதன் பிறகு துணியை எடுத்து அந்த தண்ணீரில் போட்டு விட வேண்டும். துணி முழுவதுமாக தண்ணீரில் மூழ்க வேண்டும். இப்படி செய்யும் போது கை வைத்து அழுத்த வைக்க வேண்டாம் தண்ணீர் மிகவும் சூடாகவும் இருக்கும். கரண்டி, மத்து, குச்சி ஏதாவது ஒன்றை எடுத்து துணியை தண்ணீர் உள்ளே முழுவதுமாக முழுகும் படி நினைத்து வைத்து விடுங்கள்.
இது அப்படியே இருக்கட்டும் தண்ணீர் நன்றாக ஆறி ய பிறகு மறுபடியும் நீங்கள் இது போல மத்து கரண்டி ஏதாவது வைத்து துணியை அந்த தண்ணீரில் நன்றாக சுழற்றி விடுங்கள் தண்ணீர் நன்றாக ஆறி இருந்தால் கையை பயன்படுத்தலாம் தவறில்லை. அதன் பிறகு துணியை எடுத்து லேசாக அழுத்தி பிழிய வேண்டும். முறுக்கி பிழியக்கூடாது லேசாக துணியை கையாண்டு கைகளால் அழுத்தினால் தண்ணீர் வெளியேறி விடும்.
அதன் பிறகு நல்ல தண்ணீரில் மூன்று முறை இந்த துணியை அலசி அதே போல லேசாக தண்ணீர் வடியும் மாறு அழுத்தி பிழிய வேண்டும். இந்த காரணம் கொண்டும் துணியை முறுக்கிப் பிழிய கூடாது.
இதையும் படிக்கலாமே: கை வலிக்காமல் மிதியடிகளை துவைப்பதற்கு இப்படியும் ஒரு ஐடியா இருக்கு. ஒரு மாதம் துவைக்காத மிதியடியை கூட ஈஸியா சுத்தம் செய்ய 1 மூடி இந்த லிக்விட் இருந்தால் போதும்.
அலசிய துணியை வீட்டின் நிழலில் பேன் காற்றில் ஆற வைக்க வேண்டும். வெயிலில் காய வைக்க கூடாது. அவ்வளவு தான் உங்களின் சாயம் போன பழைய டிரஸ் புதிதாக மாறிவிட்டது. இது பழைய டிரஸ் என்று நீங்கள் சொன்னால் ஒழிய யாராலும் கண்டு பிடிக்கவே முடியாது.