
பலரது கஷ்டங்களை தீர்த்து நிம்மதியான வாழ்க்கையை வாழ வைக்கும் அற்புதமான தெய்வமாக தான் வாராகி அம்மன் திகழ்கிறார். என்னதான் இவர் உக்கிர தெய்வமாக இருந்தாலும் வெற்றிக்கு அருள் புரியக்கூடிய அற்புதமான தெய்வம் ஆகவும், தன்னை நம்பி வந்தவர்களை காப்பாற்றும் தெய்வமாகவும் திகழ்கிறார். அப்படிப்பட்ட வாராகி அம்மனை நாம் வழிபாடு செய்யும்பொழுது சொல்ல முடியாத துயரங்களும் நம்மை விட்டுச் செல்லும். அந்த வகையில் பஞ்சமி தினத்தன்று வாராகி அம்மனை தீப வடிவில் வழிபாடு செய்யும் முறையைப் பற்றி நான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக திகழ்வது பஞ்சமி திதி வரக்கூடிய நாள். இது வளர்பிறை தேய்பிறை என்று மாதத்தில் இரண்டு முறை வரும். அதிலும் நம்முடைய கஷ்டங்களை தீர்த்து நமக்கு நல்வாழ்வு அளிப்பதற்கு நாம் வாராகி அம்மனை தேய்பிறை பஞ்சமியில் வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் மே மாதத்தின் 17ஆம் தேதி தேய்பிறை பஞ்சமி வருகிறது. அன்றைய நாளில் வாராகி அம்மனை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.
வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு பலவிதமான வழிமுறைகள் இருக்கின்றன. வீட்டில் வாராகி அம்மனின் சிலை வைத்திருப்பவர்கள் வாராகி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வாராகி அம்மனுக்கு பிடித்தமான மலர்களை வைத்து அலங்காரம் செய்து கிழங்கு வகைகளை நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்வார்கள். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது கண்டிப்பான முறையில் தீபத்தையும் ஏற்றி வைப்பார்கள். ஒரு சிலர் ஐந்து முகம் கொண்ட தீபத்தை ஏற்றுவார்கள். ஒரு சிலர் ஐந்து தீபங்களையும் ஏற்றுவார்கள். இன்னும் சிலரோ தேங்காய் தீபம், பூசணி தீபம் என்று பலவிதமான தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்வார்கள். வாராகி அம்மன் படமோ சிலையோ இல்லாதவர்கள் தீபத்தில் வாராகி அம்மனை வழிபாடு செய்வார்கள் அந்த முறையைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.
நாம் நினைத்த மாத்திரத்தில் நமக்கு அருள் புரியக்கூடிய வாராகி அம்மனை தீப வழிபில் நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய துயரங்கள் அனைத்தும் காணாமல் போகும் என்று கூறப்படுகிறது. இந்த தீபத்தை மாலை 5:20 மணியிலிருந்து 6:50 மணிக்குள் ஏற்ற வேண்டும். இந்த தீபம் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் எரிய வேண்டும். இதற்கு முதலில் ஒரு முக்காலியை வீட்டு பூஜை அறையிலோ அல்லது வீட்டின் மையப் பகுதியிலோ வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு வாழை இலையை விரித்து அதில் பச்சரிசியை பரப்பி அதற்கு மேல் வாசனை நிறைந்த மலர்களை வைத்து நடுவில் ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி ஐந்து திரிகளை ஒன்றாக திரித்து போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபம் தான் வாராகி அம்மன் என்று முழு மனதோடு நம்பி தரிசனம் செய்யவேண்டும். இந்த தீபத்திற்கு முன்பாக வாராகி அம்மனுக்கு பிடித்தமான கிழங்கு வகைகளை நெய்வேத்தியமாக வைத்துவிட்டு அந்த தீபத்தை மூன்று முறை வலம் வர வேண்டும். பிறகு வாராகி அம்மனின் இந்த ஒரு மந்திரத்தை தீபத்தை பார்த்தவாறு கூறி வேண்டும். இந்த மந்திரத்தை 21 முறை கூற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் வராகி நமோஸ்துதே”
இதையும் படிக்கலாமே:பிரச்சினைகளை தீர்க்கும் பஞ்ச தீபம்
பஞ்சமி தினத்தில் தீப வடிவில் வாராகி அம்மனை இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய துயரங்களும் கஷ்டங்களும் அவர்களை விட்டு படிப்படியாக விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.