- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபிரச்சினைகளை தீர்க்கும் பஞ்ச தீபம்

பிரச்சினைகளை தீர்க்கும் பஞ்ச தீபம்

- Advertisement -

வைகாசி மாதம் என்பது அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட வைகாசி மாதத்தில் வாராகி அம்மனுக்கு உகந்த பஞ்சமி திதி வருகிறது. தேய்பிறையில் வரக்கூடிய பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய நீண்ட நாள் கஷ்டங்களும் பிரச்சனைகளும் தீர ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தேய்பிறை பஞ்சமி நாளன்று வாராகி அம்மனை நினைத்து ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பிரச்சினைகளை தீர்க்கும் பஞ்ச தீபம்

வைகாசி மாதத்தின் மூன்றாம் நாள் மே மாதத்தின் 17ஆம் தேதி சனிக்கிழமை அன்று தேய்பிறை பஞ்சமி வருகிறது. இந்த தேய்பிறை பஞ்சமி அன்று காலை 3:33 மணியிலிருந்து ஆரம்பித்து மறுநாள் காலை 3:32 மணி வரை இருக்கிறது என்பதால் சனிக்கிழமை முழுவதும் பஞ்சமி திதி நிறைந்திருக்கிறது. சனிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பஞ்சமி திதிக்கு அதிக அளவில் பலன் இருக்கிறது என்றும் அந்த தினத்தில் நாம் வாராகி அம்மனை வழிபாடு செய்யும்பொழுது சனி தோஷமும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

நீண்ட நாட்களாக போராடிக் கொண்டிருக்கும் பிரச்சனை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் சனிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பஞ்சமி தினத்தன்று வாராகி அம்மனை நினைத்து ஐந்து தீபங்களை ஏற்ற வேண்டும். எப்பொழுதும் பஞ்சமி திதியில் எந்த முறையில் வழிபாடு செய்வீர்களோ அந்த முறையில் வழிபாடுகள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு இந்த தீபத்தையும் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை மாலை 6:30 மணியிலிருந்து இரவு 11 மணிக்குள் ஏற்றுவிட வேண்டும்.

இந்த தீபத்தை ஏற்றுவதற்கு முதலில் ஒரு தாம்பாள தட்டை தயார் செய்து கொள்ளுங்கள். அதற்கு ஐந்து என்ற எண்ணிக்கையில் மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக 5 அகல் விளக்குகளை சுத்தம் செய்து அதற்கும் மஞ்சள் குங்குமம் வைத்து அந்த தாம்பாளத்தில் வைத்து விட வேண்டும். அடுத்ததாக இதற்கு நமக்கு கருநீலம் அல்லது கருப்பு நிற துணி வேண்டும். அந்த துணியை சதுர வடிவில் 5 என்ற எண்ணிக்கையில் வெட்டி தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு துணியிலும் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெண்கடுகை போட்டு மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த மூட்டைகளை அந்த ஐந்து அகல் விளக்குகளிலும் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது வாராகி அம்மனிடம் உங்களுடைய எந்த பிரச்சினை தீர வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை கூறி தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு இந்த ஐந்து தீபங்களையும் ஏற்ற வேண்டும். இந்த தீபம் முற்றிலும் எரிந்து தானாக குளிர வேண்டும். இதில் இருக்கக்கூடிய வெண்கடுகு அனைத்தும் வெடிப்பதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது. மேலும் கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம், எதிரிகளின் தொல்லை, துரோகிகளால் ஏற்படும் பிரச்சனை, சனீஸ்வர பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் என்று அனைத்துமே நிவர்த்தி அடையும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:வேண்டுதலை நிறைவேற்றும் 11 நாணயங்கள்

உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடிய வாராகி அம்மனுக்கு பஞ்சமி தினத்தன்று பஞ்ச தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்