
எவ்வளவு அழகான முகமாக இருந்தாலும் தலையின் மேல் முடி இருந்தால்தான் அந்த முகத்திற்கு அழகாக இருக்கும். ஒரு ராஜாவிற்கு கிரீடம் எந்த அளவிற்கு அழகை சேர்கிறதோ அதே போல் தான் நம் ஒவ்வொருவரின் முகத்திற்கும் தலைமுடி என்பது கிரீடமாக இருந்து அழகை சேர்கிறது. அப்படிப்பட்ட தலைமுடியின் பிரச்சனைகளில் முக்கியமான பிரச்சினையான முடி பிளவு பிரச்சினையை தீர்ப்பதற்குரிய எளிய டிப்ஸை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
அடர்த்தியாக வளரக்கூடிய ஒரு முடி இரண்டாகவோ மூன்றாகவோ அல்லது அதற்கு மேற்பட்டு பிரிந்து மிகவும் மெல்லியதாக மாறுவதுதான் முடிப்பிளவு. இது முடியின் நுனிப்பகுதியில் ஏற்படுகிறது. இந்த முடி பிளவு ஏற்படுவதன் மூலம் முடி வளர்ச்சி என்பது தடுக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஒரு சிலருக்கு முடி உதிர்தல் பிரச்சனையும் ஏற்படும்.
ஒரு சில காரணங்களால் இந்த முடிப்பிளவு பிரச்சனை ஏற்படுகிறது. முடி வறண்டு போய் இருப்பதால் முடிப்பிளவு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் பூச்சி வெட்டு என்று சொல்லக்கூடிய ஒருவித பூஞ்சை தொற்றால் இந்த முடிப்பிளவு பிரச்சினை ஏற்படும். பூச்சி வெட்டால் முடிப்பிளவு பிரச்சனை ஏற்படும்பொழுது அதை உடனடியாக கவனிக்காவிட்டால் தலையில் வழுக்கை விழும் அளவிற்கு கூட பாதிப்புகள் ஏற்படும். மேலும் ஆரோக்கியமற்ற முடி பராமரிப்பாலும் முடி பிளவு பிரச்சினை ஏற்படும்.
முடி பிளவை ஏற்பட்டு விட்டால் நுனி முடியை கத்திரிக்கோலின் உதவியால் வெட்டுவதுண்டு. இதுதான் பலகாலமாக நாம் பின்பற்றி வரும் வழிமுறை. முடி பிளவு ஏற்பட்டு விட்டால் அதை நாம் வெட்ட வேண்டும் என்றாலும் மறுபடியும் அந்த முடி பிறவு ஏற்படாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி பார்த்துக் கொண்டால் தான் முடி ஆரோக்கியமாக இருக்கும்.
போதுமான அளவு ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை உட்கொள்ள வேண்டும். அதோடு தலை முடி வறட்சியை நீக்குவதற்கு தலைக்கு எண்ணெய் தடவுவது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக வேப்ப எண்ணெய் முடிப்பிளவையும் பூச்சி வெட்டையும் தவிர்க்கக்கூடிய ஒரு அற்புதமான எண்ணையாக திகழ்கிறது. வேப்ப எண்ணையும் தேங்காய் எண்ணெயும் சம அளவு எடுத்து கலந்து தடவிக் கொள்ளலாம். வெறும் வேப்ப எண்ணெய் மட்டுமே கூட தடவி கொள்ளலாம்.
இது இல்லாமல் வெந்தயம் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் ஒரு ஸ்பூன் இரண்டையும் எடுத்து நன்றாக நுணுக்கி கொள்ள வேண்டும். மிக்ஸி ஜாரில் போடாமல் நுணுக்கி கொள்ள வேண்டும். நுணுக்கியை இந்த பொடியை இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அது ஒரு டம்ளர் ஆகும் வரை கொதிக்க விட்டு வடிகட்டி ஒரு ஸ்பிரே பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை தலைக்கு குளித்த நாள் அன்று தலை முடி வேர் கால்களில் இருந்து தலைமுடியின் நுனி வரை ஸ்பிரே செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முடி பிளவு பிரச்சனை நீங்குவதோடு மட்டுமல்லாமல் முடி உதிர்தல் முற்றிலும் நின்று முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே: முக நிறத்தை மேம்படுத்தும் கொத்தமல்லி கிரீம்
இந்த முறையில் முடியின் பராமரிப்பை மேற்கொள்வதன் மூலம் முடிப்பிளவை நாம் படிப்படியாக நிறுத்தி ஆரோக்கியமான முடியை வளர வைக்க முடியும்.