- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதுசு புதுசாக யோசனைகள் தோன்றும். ஏதாவது ஒரு விஷயத்தை புதுசாக செய்ய வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அந்த முயற்சி உங்களுக்கு வெற்றியையும் கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமாக தான் நல்லது நடக்கும். வியாபாரத்தில் பார்ட்னரிடம் புரிதல் இருக்காது. இதனால் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. நிதி நிலைமையை பொருத்தவரை சீராகத்தான் இருக்கும் பிரச்சனைகள் இல்லை.

ரிஷபம்


ரிஷப ராசி காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். ஆனால் எல்லா வேலையிலும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளுடன் பணிவோடு பேசுங்கள். எதிர்த்து பேசாதீர்கள். சண்டை போட்டால் இன்று நல்லது நடக்காது. கொஞ்சம் பணிந்து சென்றால் நிறைய நல்லது நடக்கும். சரியாக பிளான் செய்யாமல் எந்த ஒரு முடிவையும் எடுக்கக் கூடாது. முன்பின் தெரியாத விஷயத்தில் காலை வைக்கக் கூடாது.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் அதிகமாக ஈடுபடும். இதனால் கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தோடு இன்று மாலை நேரத்தை செலவு செய்வீர்கள். மற்றபடி வேலையில் எந்த பிரச்சனையும் இருக்காது. இந்த நாள் சுமுகமாக செல்லும். நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன ஏமாற்றங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பெரிய அளவில் யார் மீதும் நம்பிக்கை வைக்காதீர்கள். எதிர்பார்ப்பும் வைக்காதீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். நல்லது நடக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கொஞ்சம் முதலீட்டை போட்டாலே நிறைய லாபம் கிடைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சுறுசுறுப்போடு உங்களுடைய பணிகளை சரியாக செய்து முடிப்பீர்கள். இதனால் பாராட்டுகளும் கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். நிதிநிலைமை சீராகும். கடன் பிரச்சனையில் இருந்து வெளிவருவீர்கள். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும். மூன்றாவது நபரை வீட்டு விஷயத்தில் தலையிட வைக்க வேண்டாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வார்த்தையில் கவனம் தேவை. அனாவசியமாக பேசக்கூடாது. குறிப்பாக அடுத்தவர்கள் பிரச்சனையில் தலையிட்டு பஞ்சாயத்து செய்யக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் சரியான நேரத்தில் வேலையை முடித்துக் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இதனால் யாருக்கும் வாக்கு கொடுக்காதீங்க. தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன தைரியம் அதிகமாக இருக்கும். எந்த ஒரு வேலையை எடுத்தாலும் உறுதியோடு அதை செய்து முடிப்பீர்கள். இதனால் பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பார்ட்னரின் உதவியோடு தொழிலை சரியான பாதையில் நடத்திச் செல்வீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்ககள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. இன்று காலை அப்படியே கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு தான் உங்களுடைய நாள் தொடங்கும். அப்படியே போகப் போக சுறுசுறுப்பாக மாறிவிடும். இன்று மாலை எல்லா வேலைகளையும் சரியாக பிளான் பண்ணி முடித்திருப்பீர்கள். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை சந்தோஷமாக செலவு செய்வீர்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று சில விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். எதிரிகளை அவ்வளவு சுலபமாக எடை போடக்கூடாது. தொழிலிலும் கூடுதல் கவனம் தேவை. யாரை நம்பியும் கடனுக்கு வியாபாரம் செய்யாதீங்க. முன்பின் தெரியாத நபர்களை நம்ப வேண்டாம். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எந்த பிரச்சனையையும் பெரிசாக்க வேண்டாம். அனுசரித்த சென்றால் நல்லது.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனமான நாளாக இருக்கும். எந்த வேலையையும் முழுசாக செய்து முடிக்க மாட்டீர்கள். இதனால் மேல் அதிகாரிகளிடம் திட்டு வாங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் துவண்டு போகக்கூடாது. சோம்பேறித்தனத்தை தூக்கி போட்டு விட்டு எப்படியாவது வேலையை முடித்து தர பாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

கும்பம்


இன்று உங்களுக்கு ஏமாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்கும். உடனே சோர்ந்து போய் விடாதீர்கள். எல்லா விஷயத்திலும் கவனமாக இருந்தால் ஏமாறுவதை தவிர்க்கலாம். எதுவாக இருந்தாலும் கொஞ்சம் பொறுமையாக சிந்தித்து செயல்படவும். நல்லது உங்கள் கைவரை வரும். ஆனால் அதை உங்களால் அடைய முடியாது. நிறைய நல்ல விஷயங்களை இழப்பதற்கு இன்று வாய்ப்புகள் இருக்கிறது. அதுதாங்க துரதிஷ்டம் அது உங்களுக்கு இன்னைக்கு வேலை செய்யலாம்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இருக்கக்கூடிய ஒரே பிரச்சனை ஈகோ. அதை தூக்கி தூர போட்டாலே நல்லா ஆயிரம் உங்க வாழ்க்கை. ஆனால் சில விஷயங்களை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், சில விஷயங்களை வெளியே சொல்லவும் முடியாமல், தவிக்க கூடிய தர்ம சங்கடம் உங்களுக்கு தாங்க நடக்குது. எதுவாக இருந்தாலும் முன்கோபத்தை குறைப்பது நல்லது. குடும்பத்தில் பிரச்சனைகள் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் குறையும். ஜாக்கிரதையா இருங்க.

- Advertisement -