- Advertisement -
ராசி பலன் | Indraya rasi palan

Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (01/07/2019): அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்

மேஷம்:

மகிழ்ச்சியான நாள். எதிர்பாராத பணவரவு உண்டாகும். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். மாலையில் உறவி னர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.

- Advertisement -

ரிஷபம்:

உற்சாகமான நாள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கையும் அதனால் ஆதாயமும் உண்டாகும். அலுவலகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் நீங்கள் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தன லாபம் ஏற்படும்.

மிதுனம்:

முற்பகல் வரை காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். தேவைக்கேற்ப பணம் கையில் இருக்காது. அதனால் கடன் வாங்கவும் நேரிடும் உணவு விஷயத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய காரியங்களில் ஈடுபட வேண்டாம்.

- Advertisement -

கடகம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். லாபகரமான செயல்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்கு இன்றைய ராசி பலன் படி இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

- Advertisement -

கன்னி:

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்கு மேல் சில எதிர்பாராத பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேச்சில் நிதானம் தேவை. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத சங்கடங்கள் தோன்றக்கூடும்.

துலாம்:

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

விருச்சிகம்:

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. ஆனாலும், பணப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் கடன் வாங்கவும் நேரும். மாலையில் ஒரு சிலருக்கு லேசான தலைவலி வரக்கூடும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

தனுசு:

இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. அலுவலகத்தில் அதிகரிக்கும் பணிச்சுமை உங்களை சோர்வு அடையச் செய்யும். மாலையில் சோர்வு நீங்கி தெளிவு பிறக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சஞ்சலங்கள் ஏற்படக்கூடும்.

மகரம்:

அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். ஆனால், பிற்பகலுக்குமேல் உங்கள் காரியங்களில் சில தடை தாமதங்கள் உண்டாகும். சாப்பிடக்கூட முடியாதபடி வேலைச் சுமை இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாலையில் ஆலய தரிசனம் செய்வீர்கள்.
- Advertisement -

கும்பம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது.தசா புக்திகள் சாதகமாக இருப்பவர்களுக்கு தொலைந்த பொருள் கிடைப்பது, மகான்களின் தரிசனம் போன்ற சுப பலன்கள் நடக்கும். மாலைவேளையில் சிலருக்கு லேசான தலைவலி ஏற்படக்கூடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

மீனம்:

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்களின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ தரிசனமும் மகான்களின் ஆசியும் கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by