- Advertisement -
ராசி பலன் | Indraya rasi palan

Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (04/08/2019): மனம் உற்சாகமாகக் காணப்படும்

மேஷம்:

எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. மாலையில் நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்குமேல் உற்சாகம் பிறக்கும். சிறிய அளவில் மன உளைச்சல் ஏற்படும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

- Advertisement -

ரிஷபம்:

இன்று முயற்சி செய்யும் காரியங்கள் அனுகூலமாக முடியும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சகோதர வகையில் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை மந்தமாகத்தான் இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

மிதுனம்:

வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாய் வழி உறவுகளிடம் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். சகோதரர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரிய மனிதர்களின் தொடர்பால் நன்மை ஏற்படும்.

- Advertisement -

கடகம்:

சிலருக்கு எதிர்பாராத பணம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. சிலருக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். ஆயில்யம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

சிம்மம்:

தாய் வழி உறவுகளால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மனம் உற்சாகமாகக் காணப்படும். ஒரு சிலருக்குக் குடும்பத்துடன் சென்று குலதெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

- Advertisement -

கன்னி:

தெய்வப் பணிகளில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சித்திரை முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

துலாம்:

வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வாழ்க்கைத்துணை வழியில் பணவரவு உண்டாகும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நன்மை உண்டாகும்.

விருச்சிகம்:

குடும்பத்தின் காரணமாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும் என்பதால் உடல் அசதி உண்டாகும். உற்சாகமான நாள். நண்பர்களிடத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பும் காரிய அனுகூலமும் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

தனுசு:

பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். உற்சாகமான நாள். அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்:

மகர ராசிக்கு இன்றைய ராசி பலன் படி உற்சாகமான நாள். புதிய முயற்சிகள் அனுகூலமாகும். இன்று நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். முற்பகல் வரை காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.
- Advertisement -

கும்பம்:

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தரும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களைத் தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

மீனம்:

அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும். அரசாங்கக் காரியங்களில் பொறுமை அவசியம். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by