- Advertisement -

மேஷம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.

ரிஷபம்:

- Advertisement -


அரசு அதிகாரிகளுடன் கருத்துவேறுபாடும் மனக் கசப்பும் உண்டாகும். காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். வெளியில் செல்லும்போது பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

மிதுனம்:


அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். பிற்பகலுக்குமேல் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். சிலருக்கு வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டாகும்.

கடகம்:

- Advertisement -


விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். உற்சாகமான நாள். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்மம்:


பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். முயற்சிகளில் வெற்றியும் பண லாபமும் உண்டாகும்.சிலருக்கு வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.. வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரியோர்களின் ஆசிகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

கன்னி:

- Advertisement -


வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாய் வழி உறவுகளிடம் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். சகோதரர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய்வழியில் சிறு சங்கடங்களைச் சந்திக்கவேண்டி வரும்.

துலாம்:


இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எதிலும் பொறுமை அவசியம். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் நன்மை உண்டாகும்.

உங்கள் ராசிக்கான மே மாத பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

விருச்சிகம்:


எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும்.பி உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

தனுசு:


வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும். உறவினர்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். மனம் உற்சாகமாகக் காணப்படும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

மகரம்:


புதிய முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்பு உண்டுற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

கும்பம்:


வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி இன்றைக்குக் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். பேச்சிலும் செயலிலும் பொறுமை அவசியம். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

மீனம்:


பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத விருந்தினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். முயற்சிகள் வெற்றி அடையும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

- Advertisement -