மே மாத ராசி பலன் 2018

May Matha pala

மேஷம்:
Mesham Rasiமேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த மாதம் சிக்கனமாக இருப்பது நல்லது. வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுவரை கிடப்பில் போட்டிருந்த விடயங்களை கூட இந்த மாதம் முடித்து காட்டுவீர்கள். அந்த அளவிற்கு உங்களின் செயலில் வேகம் இருக்கும். உற்றார் உறவினர்கள் மத்தியிலும், நண்பர்கள் மத்தியிலும் மரியாதை கூடும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். சிறு சிறு பிரச்சனைகள் குடும்பத்தில் வந்தாலும் அதை நீங்கள் பெரிது படுத்தாமல் இருக்கவேண்டிய காலம் இது. சகோதர சகோதரிகளுக்கு இடையே சில மன கசப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. அலுவலகத்தில் முக்கிய பணிகளை செய்யும் பொறுப்பு உங்களிடம் வந்து சேரும். சில நேரங்களில் நீங்கள் பதட்டத்தோடு செயல்பட நேரிடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்:
Rishabam Rasiரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த மாதம் எந்த ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பும் சிறப்பாக சிந்தித்து, நல்ல முறையில் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் உங்களுக்கான மரியாதை உயரும் வகையில் நடந்துகொள்வீர்கள். இக்கட்டான சூழலில் நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவி கரத்தினை நீட்டுவார். சில நேரங்களில் வேலை காரணமாக அதிக உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புண்டு. ஆகையால் உடல் நலன் மீதும் கவனம் செலுத்துவது நல்லது. பெற்றோர்கள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனைவியின் வாயிலாக சந்தோஷம் ஏற்பட வாய்ப்புண்டு. யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். பண விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. தந்தை வழி உறவுகளால் வீண் அலைச்சல்களும் செலவும் ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரிகள் கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்:
Mithunam Rasiமிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த மாதம் அவர்கள் கையில் எடுக்கும் காரியங்கள் வெற்றி அடையும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு. பண புழக்கம் நல்ல முறையில் இருக்கும். நீண்ட நாளாக வராத கடன் வந்து சேரும். தந்தை மகன் உறவில் சிறு சிறு சண்டைகள் வர வாய்ப்புண்டு. ஆகையால் தந்தை மனம் கோணாமல் நடந்துகொள்வது நல்லது. சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் கணவன் மனைவி இருவரும் நன்கு ஆலோசித்து எடுப்பது நல்லது. அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் சில நேரம் பாதகமாக அமைய வாய்ப்புள்ளது. இந்த மாதத்தின் பிற்பகுதியில் நல்லதொரு முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் பண வரவு நல்லபடியாக இருக்கும். சக வியாபாரிகளுடன் நட்போடு பழகுவது நல்லது.

கடகம்:
Kadagam Rasiகடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த மாதம் உடல் ரீதியாக சில பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. ஆகையால் உணவு பழக்க வழக்கங்களில் கவனம் தேவை. செய்யும் வேலையில் சில தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் நல்ல விதமாக முடியும். எந்த ஒரு புதிய முயற்சிகளிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இந்த மாதத்தின் பிற் புகுதியில் உங்களது பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைக்கும். உறவினர்களும் நண்பர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இந்த மாதம் திடீர் அதிஷ்டம் ஏற்படவும் வாய்ப்புண்டு. அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்க வாய்ப்புண்டு. நீங்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் மிகுந்த கவனத்தோடு செய்வது நல்லது. யாரை நம்பியும் பெரிய தொகையை கடன் தர வேண்டாம். அலுவலக பணியில் உள்ள பெண்களுக்கு பணி உயர்வு ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரிகளுக்கு நல்லதொரு முன்னேற்றம் இருக்கும்.

சிம்மம்:
simmamசிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிபெறுவீர்கள். எதிர்பாராத பண வரவிற்கு வாய்ப்புண்டு. கணவன் மனைவிக்கு இடையே வீண் விவாதங்கள் வர வாய்ப்புண்டு. ஆகையால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் மூலம் பெருமை வந்து சேரும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புண்டு. மாதப் பிற்பகுதியில் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றத்துக்குத் தடை இருக்காது. உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் அன்பும் இருக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தொழில், வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும். வியாபாரத்தில் சில நேரம் மிகுதியான போட்டி இருக்கும். அதை சமாளிக்க கடுமையாக உழைக்க நேரிடும்.

கன்னி:
Kanni Rasiகன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த மாதம் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவிற்கு வாய்ப்புண்டு. சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளுடன் பேசும்போது பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் பெருகும். வியாபாரிகளை பொறுத்தவரை யாருக்கும் பெரிய அளவில் கடன் தரவேண்டாம். பழைய பாக்கிகளைக் வசூலிப்பதிலும் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

- Advertisement -

துலாம்:
Thulam Rasiதுலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த மாதம் திடீர் அதிஷ்டத்திற்கு வாய்ப்புண்டு. எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். குல தெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்துவது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறிய அளவில் பாதிப்படைய வாய்ப்புள்ளது. அதே போல பெற்றோர்களின் ஆரோக்கியத்திலும் கவனமாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் அதிக பணிச்சுமை ஏற்படுவதால், மனதில் சோர்வும், உடல் அசதியும் உண்டாகும். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவீர்கள். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். வியாபாரிகளுக்கு நல்லதொரு முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்த வங்கியில் கடனுதவி கிடைக்கும் வாய்ப்புண்டு.

விருச்சிகம்:
Virichigam Rasiவிருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த மாதம் புதிய முயற்சிகள் அனைத்தும் மிக எளிதாக வெற்றி அடையும். குடும்ப பெண்களுக்கு கணவரின் பாராட்டு கிடைக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சிறப்பான பலன்கள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. சிலருக்கு வெளியூர் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். மாதப் பிற்பகுதியில் குடும்பப் பெரியவர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் உங்களை உற்சாகப்படுத்தும். அலுவலகத்தில் உங்களுடைய எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரிகளுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.

தனுசு:
Dhanusu Rasiதனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த மாதம் எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வ பக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிரமம் எதுவும் இருக்காது. கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு வெளிமாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அரசாங்க விவகாரங்கள் சாதகமாக முடியும். அலுவலக பணியை பொறுத்தவரை பணி சுமை சற்று அதிகமாக இருந்தாலும் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் படிப்படியாக உயரும்.

மகரம்:
Magaram rasiமகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த மாதம் உறவினர்களாலும் நண்பர்களாலும் நன்மைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான திருப்புமுனை மாதமாக இந்த மாதம் அமையும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிகளில் கூடுதல் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தை பொறுத்தவரை புதிய முயற்சிகள் வெற்றி பெறும்.

கும்பம்:
Kumbam Rasiகும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த மாதம் பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடியே நடத்தி முடிப்பீர்கள். மாதப் பிற்பகுதியில் சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு சரியாகும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். அதேபோல பணிச்சுமை என்பது சற்று அதிகமாகவே இருக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சற்று சிரமம் இருக்கவே செய்யும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளோர் முன்பின் தெரியாதவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டாம்.

மீனம்:
Meenam Rasiமீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த மாதம் நிலுவைப் பணிகளை முடிப்பதற்கான ஆற்றல் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்கள் ஆழமாக நம்புவீர்கள். பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் தக்க சமயத்தில் கை கொடுத்து உதவுவர். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். பயணம் காரணமாக உங்கள் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகமாகக் கிடைக்கும். சக போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் மூலம் நீங்கள் மகிழ்ச்சிகொள்வீர்கள்.

தின பலன், வார ராசி பலன், மாத ராசி பலன், தமிழ் பஞ்சாங்க குறிப்புக்கள் என ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.