- Advertisement -
ராசி பலன் | Indraya rasi palan

Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (12/06/2019): புதியவர்களின் அறிமுகம் நன்மை உண்டாக்கும்

மேஷம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். தெய்வப்பணிகளில் ஈடுபடுவீர்கள். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

ரிஷபம்:

பிற்பகல்வரை புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப் பதால் மனதில் சோர்வு உண்டாகும். குடும்பத்தில் உறவினர்களால் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை நிகழும்.

- Advertisement -

மிதுனம்:

முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கோர்ட் வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.

கடகம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் சில சங்கடங்களைச் சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்லவர்களின் நட்பும் அதனால் நன்மையும் உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்:

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். கொடுத்த கடன் திரும்ப வரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். வியாபாரத்தில் பணியாளர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

கன்னி:

புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும். வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

- Advertisement -

துலாம்:

சகோதர வகையில் எதிர்பார்க்கும் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் தேவையற்ற அலைச்சல் உங்களை சோர்வு அடையச் செய்யும். திட்டமிட்டு அலைச்சலைக் குறைக்க முயற்சிக்கவும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. வியாபாரத்தில் பணியாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது அவசியம்.

விருச்சிகம்:

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

தனுசு:

உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். ஒரு சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

மகரம்:

மகர ராசிக்கு இன்றைய ராசி பலன் படி இன்று வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி கிடைப்பதற்கில்லை. வேலையாள்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் ஏற்படும்.
- Advertisement -

கும்பம்:

மனம் உற்சாகமாகக் காணப்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் மாமன் வகையில் நன்மை ஏற்படும்.

மீனம்:

உங்கள் முயற்சிக்கு குடும்பத்தில் வரவேற்பு கிடைக்கும். மனைவியுடன் சில மண கசப்புகள் ஏற்பட்டு விலகும். அரசு பணிகளை செய்யும் பொது பொறுமையை கடைபிடியுங்கள். அலுவலகத்தில் வழக்கம்போல் பணிகளை செய்விர்கள். உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by