- Advertisement -
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற செலவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிரமோஷனுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தை பொருத்தவரை முதலீட்டில் கவனம் தேவை.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று தைரியசாலிகளாக இருப்பீர்கள். துணிச்சலோடு நடந்து கொள்வீர்கள். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். மன பாரம் குறையும். நிம்மதி கிடைக்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகரிக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியை கற்பதில் இருந்து வந்த தடை விலகும். மனதிற்கு பிடித்த கல்லூரியில் சீட்டு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் டென்ஷன் குறையும். பண பிரச்சனைகள் சரியாகும்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். காரிய தடை விலகும். வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பெரிய அளவில் இருந்த டென்ஷன் குறையும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வீட்டில் இருந்து வந்த சுபகாரிய தடைகள் விலகும். இறைவழிபாடு செய்வது மனதுக்கு அமைதியை தரும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். தெளிவாக சிந்திப்பீர்கள். குழப்பமான மன நிலையிலிருந்து விடுபடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்தால் நல்லது.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். வாரா கடன் வசூலாகும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு உண்டான நல்ல வழி பிறக்கும். சொத்து சுகம் சேர்க்கையும் உண்டு. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வேலையை பொருத்தவரை நிதானம் தேவை. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். தெளிவாக சிந்திப்பீர்கள். மனக்குழப்பத்திலிருந்து விடுபடுவீர்கள். இறை நம்பிக்கை அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்கள் கை ஓங்கி நிற்கும். மாணவர்களுக்கு கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில் நல்ல முன்னேற்றம் வரும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் பதட்டம் இருக்கும். புது முடிவுகள் எடுக்கும் போது தன்னம்பிக்கை தைரியம் வராது. குழப்பமான நேரத்தில் புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். இறைவழிபாடு செய்யுங்கள். அன்றாட வேலையில் கவனம் செலுத்துங்கள். நேரத்தை வீணடிக்க வேண்டாம். நிச்சயம் நல்லது நடக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை நிதானம் தேவை. அவசரப்பட்டு என்று எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் நிதானம் தேவை. வண்டி வாகனம் ஓட்டும் போது பொறுமையாக இருக்கவும். மனதை தேவையில்லாமல் அலைபாய விடாதீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்புகளை மேற்கொள்ளலாம். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவம் வெளிப்படும். தேவையில்லாத டென்ஷன் குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். சுறுசுறுப்பு இருக்கும். இறை வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். தேவையில்லாத டென்ஷன் குறையும். கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். சில பேருக்கு நீண்ட தூர பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை.

- Advertisement -