
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மகாலட்சுமி வழிபாடு மனதிற்கு நிறைவு தரும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு டென்ஷன் குறையும். உறவுகளோடு இருந்து வந்த பிரச்சனை சரியாகும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். வருமானம் பெருகும். கடன் சுமை குறையும்.
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று திறமையாக சிந்தித்து செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். பெரிய அளவில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை கூட, சர்வசாதாரணமாக தீர்த்து வைப்பீர்கள். சமயோஜித புத்தி உங்களை இன்று உயர்த்தி விடும். இறை நம்பிக்கை அதிகரிக்கும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வங்கி கடன் முயற்சிக்கலாம். எதிர்கால சேமிப்புக்கு முயற்சி செய்யுங்கள். நல்லதே நடக்கும். வேலையில் கொஞ்சம் நிதானம் தேவை. உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த இடத்திலும் பொய் சொல்ல வேண்டாம்.
கடக ராசி காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். பிரமோஷனுக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும். நிதிநிலைமை சீராகும். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் மன நிறைவான நாளாக இருக்கும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தேவையான அளவு ஓய்வு எடுங்கள். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் சுமூகமாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனம் இருக்கட்டும். உணவுப் பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். உடன் இருப்பவர்களால் எந்த பிரச்சனையும் வராது. நண்பர்களின் மூலம் நல்லதே நடக்கும்.
துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வேலை வேலை என்று இல்லாமல் உங்களுடைய உடம்பையும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளவும்.
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை அன்பு பாசம் காதல் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். திருமண பாக்கியம் கைகூடி வரும். காதல் கை கூடுவதற்கும் வாய்ப்பு உள்ளது. மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேசுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பெரிசாக எதிர்ப்புகள் இருக்காது.
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய வேலைகளை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வெளிப்படும். ஆசைகள் அதிகரிக்கும். அதிகப்படியான செலவாவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. கவனமாக இருங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். பேராசை ஏதாவது ஒரு வகையில் பெரு நஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்ல நாளாக இருக்கும். சுகபோக வாழ்க்கை தான். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் சென்ற இடமெல்லாம் மரியாதை கூடும். கௌரவம் உயரும். சுப செலவுகள் ஏற்படும். தேவைகள் பூர்த்தியாகும். கட்டுமான தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். கமிஷன் தொழில் வருமானத்தை கொண்டு வந்து கையில் சேர்க்கும். மனநிறைவு ஏற்படும்.
கும்ப ராசிக்காரர்கள் இன்று எந்த வேலையிலும் அதிகமாக எதிர்பார்ப்பு வைக்கக்கூடாது. அதிக எதிர்பார்ப்பு உங்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கலாம். உங்களுடைய கடமைகளை செய்யுங்கள். பலனை எதிர்பார்க்காதீர்கள். இறை வழிபாடு செய்யுங்கள் எந்த இடத்திலும் முன் கோபம் வேண்டாம். நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது.
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். எந்த விஷயத்திலும் அவசரப்பட மாட்டீர்கள். முன்கோபம் இருக்காது. பக்குவம் வெளிப்படும் நாள். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும் நாள்.