- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். செலவுக்கு தேவையான பணம் உங்களைத் தேடி வரும். நிதி பற்றாக்குறை இருக்காது. குடும்பத்தில் தேவையற்ற சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வாக்குவாதம் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். வசூலாகாத கடன் தொகை வசூலாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுகளை தொடங்கலாம். கொஞ்சம் சுபச் செலவுகள் வரும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

மிதுனம்

மிதுனராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று சுமாரான நாளாகத்தான் இருக்க போகின்றது. யாரை நம்பியும் உங்களது வேலையை ஒப்படைக்க வேண்டாம். உங்களுடைய வேலையை கவனமாக நீங்களே செய்து கொள்ளுங்கள். நண்பர்கள் என்று நம்பி கூட குடும்ப விஷயத்தை வெளியில் சொல்லாதீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சோம்பேறித்தனமான நாளாகத்தான் இருக்க போகின்றது. இருப்பினும் தினசரி செய்ய வேண்டிய உங்களது கடமைகளை தவறாமல் செய்வது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தாயின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்பான நாளாக இருக்கப் போகின்றது. நாளை செய்ய வேண்டிய வேலையை கூட, சேர்த்து இன்றைய தினமே செய்து முடித்து விடுவீர்கள். எல்லோரிடமும் நல்ல பெயர் கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமோகமான வெற்றியைத் தரக்கூடிய நாளாக இருக்கத்தான் இருக்க போகின்றது. வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொலைபேசியின் மூலமாக எதிர்பாராத நல்ல செய்தி நண்பர்கள் மூலம் உங்கள் செவிகளை வந்து சேரும். இன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ள வேண்டும். யாரையாவது நம்பி ஏமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் பொருட்கள் திருடு போவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை. வீட்டில் பிரச்சினை என்று வந்தால் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள் வீண் வாக்குவாதம் வேண்டாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இன்று திறமையாக செயல்பட்டு, உங்களுடைய பேச்சால் அனைவரையும் கவர்ந்து இழுக்க போகிறீர்கள். செய்யும் வேலையில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சொந்தத் தொழிலில் அதிக லாபத்தை கொடுக்கும். உங்களுடைய திறமை வெளிப்படும் நாள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுடைய வீட்டில் இன்று சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. சுப வேலையை தொடங்குவதற்கு கையில் இருக்கும் காசு கொஞ்சம் செலவாகும். அலைச்சல் இருக்கும். இருப்பினும் மன மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. செலவுக்கு தேவையான பணம் ஏதாவது ஒரு வழியில் வந்து உங்களைச் சேரும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று தேவையற்ற பிரச்சனையில் சிக்கிக் கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது. யாராவது அனாவசியமாக உங்களிடம் வந்து வாக்குவாதம் செய்தால் கூட, நீங்கள் அமைதியாக போவதுதான் நல்லது. வீண் வம்புக்கு சென்றால் பிரச்சினை உங்களுக்குத் தான். இன்றைய நாள் உங்களுக்கு தேவையான ஒரு விஷயம் அமைதி மட்டுமே.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் கவலையான நாளாகத்தான் இருக்க போகின்றது. வியாபாரத்தில் சுறுசுறுப்பு இருக்காது. செய்யும் வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. மனம் எதையோ இழந்தது போல இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று உதவி செய்யும் மனப்பான்மை மேலோங்கும். உங்களால் இயன்ற உதவியை அடுத்தவர்களுக்கு செய்ய முன்வருவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் உண்டு. சொந்த தொழிலில் மட்டும் அதிகப்படியான முதலீட்டை செய்ய வேண்டாம்.

- Advertisement -