- Advertisement -

மேஷம்:

எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்:

- Advertisement -

இன்று பிற்பகலுக்குள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிள்ளைகளால் பெருமை ஏற்படும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம்.

மிதுனம்:

உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். காரியங்களில் தடை தாமதம் ஏற்படக்கூடும். அலுவலகப் பணியின் காரணமாக சிலருக்கு தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள நேரும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும்.

கடகம்:

- Advertisement -

அதிகாரிகளால் ஆதாயம் ஏற்படும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும்.

சிம்மம்:

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு அலுவலகப் பணிகளின் காரணமாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். உத்தியோகத் தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது.

கன்னி:

- Advertisement -

இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை.

துலாம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். அரசாங்க விஷயங்களில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். கூடுமானவரை பயணங்களைத் தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.

விருச்சிகம்:

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும்.

தனுசு:

புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். பிற்பகலுக்குமேல் உங்கள் காரியங்களில் சில தடை தாமதங்கள் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு.

மகரம்:

பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்:

புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். அதிகரிக்கும் செலவுகளால் பணப் பற்றாக்குறை ஏற்பட்டு கடன் வாங்க நேரும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

வைகாசி மாத ராசி பலன்களை அறிய இங்கு கிளிக் செய்யவும்

மீனம்:

இன்று நீங்கள் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உறவினர்களால் சஞ்சலம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

ராசி பலன் முழுவதையும் படித்தமைக்கு நன்றி. இதில் உள்ள குறிப்புக்கள் உங்களுக்கு நிச்சயம் உதவும் என நம்புகிறோம்.

- Advertisement -