- Advertisement -
வீட்டு குறிப்புகள்

செம்பு, பித்தளை, சில்வர் பாத்திரங்களை சுலபமாக தேய்க்க சூப்பர் ஐடியா

இல்லத்தரசிகளுக்கு வீட்டில் தினமும் இருக்கக்கூடிய கடினமான வேலைகளில் ஒன்று பாத்திரம் தேய்ப்பது. செயற்கையான சோப்பை பயன்படுத்தி, பாத்திரத்தை தேய்த்து தேய்த்து இல்லத்தரசிகளது கை ரொம்பவும் மோசமாக மாறி இருக்கும். கைகள் வரட்சியாக போய்விடும். விரல்களின் நுனிகளில் அந்த சோப்பு படிந்து, சிலருக்கு நக சொத்தை கூட வரும். இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட சுலபமாக, நார் கூட இல்லாமல், வெறும் கைகளிலே பாத்திரத்தை பளபளப்பாக தேய்க்க, சூப்பரான வீட்டு குறிப்பு இதோ இல்லத்தரசிகளுக்காக.

பாத்திரங்களை சுலபமாக தேய்க்க வீட்டு குறிப்பு

கடலை மாவு 2 ஸ்பூன், சிட்ரிக் ஆசிட் 1 ஸ்பூன், பல் தேக்க பயன்படுத்தும் கோல்கேட் பவுடர் 1 ஸ்பூன், கல் உப்பு 1 ஸ்பூன். வீட்டிலேயே பாத்திரம் தேய்க்கும் பவுடர் தயாரிக்க இந்த பொருட்கள் மட்டும் இருந்தால் போதும். சிட்ரிக் ஆசிட் மளிகை கடைகளில் கிடைக்கும் அதை வாங்கிக்கோங்க. பல் தேய்க்கும் பவுடரும் கடைகளில் சுலபமாக கிடைக்கும் அதையும் வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு சின்ன பாத்திரத்தில் மேலே சொன்ன பொருட்களை எல்லாம் போட்டு ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் கொட்டி காத்து போகாமல் மூடி வைத்தால் போதும். தேவைப்படும்போது இதை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு சின்ன கிண்ணத்தில் இந்த பொடியை தேவையான அளவு எடுத்து போட்டுக் கொள்ளுங்கள்.

இந்த பொடியை எடுக்க ஈரம் படாத கரண்டியை பயன்படுத்துங்கள் ஈரம் பட்டால் இது சீக்கிரம் கெட்டுப் போகும். உங்களது வெறும் கையாலேயே இந்த பொடியை தொட்டு பாத்திரத்தை தேய்க்கலாம். செம்பு பாத்திரம், பித்தளை பாத்திரம், சில்வர் பாத்திரம், இப்படி எல்லா வகையான பாத்திரத்தை தேய்ப்பதற்கும் இந்த பொடி போதும். லேசாக இந்த பொடியை பாத்திரத்தின் மேலே தடவி, உங்கள் கையைக் கொண்டு தேய்த்த உடனேயே பாத்திரத்தின் நிறம் பளிச்சென மாறிவிடும்.

- Advertisement -

பிறகு வழக்கம் போல தண்ணீரில் கழுவி பாத்திரத்தை துடைத்து வைத்து விடுங்கள். அதிலும் குறிப்பாக பூஜை பாத்திரங்கள் தேய்க்கும் போது உப்பு தண்ணீரில் அந்த பாத்திரத்தை கழுவி விட்டு, உடனடியாக அந்த பாத்திரங்களை நல்ல தண்ணீரில் போட்டு ஒரு காட்டன் துணியை வைத்து துடைத்து எடுத்து விட்டால், நீண்ட நாட்கள் அந்த பூஜை பாத்திரங்கள் மீண்டும் கருக்காமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

உங்களுடைய வீட்டில் தினமும் பயன்படுத்தும் சில்வர் சமையல் பாத்திரம் தேய்க்க கூட இந்த பொடியை பயன்படுத்தலாம். மலிவான விலையில் கிடைக்கக்கூடிய பொருட்களை தான் இந்த பொடி செய்ய நாம் தேர்ந்தெடுத்து இருக்கின்றோம். நீங்க பாத்திரம் தேய்க்க கஷ்டப்படும் இல்லத்தரசியாக இருந்தால் இந்த வீட்டு குறிப்பு உங்களுக்காக.

இதையும் படிக்கலாமே: இல்லத்தரசிகளுக்கு தேவைப்படக்கூடிய பயனுள்ள 5 வீட்டு குறிப்புகள்

ஒரே ஒருமுறை இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்க. பிறகு காசு கொடுத்து, உங்கள் கையை வீணாக்கும் பாத்திரம் தேய்க்கும் லிக்விட், பாத்திரம் தேய்க்கும் பவுடர், சோப்பு வாங்கவே மாட்டீங்க. இப்போதெல்லாம் நிறைய பேர் வீடுகளில் தண்ணீர் குடிக்க செம்பு சொம்பு, காபி குடிக்க பித்தளை டபரா செட், தண்ணீர் ஊற்றி வைக்க பித்தளை அண்டா, இதையெல்லாம் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதை தேய்க்க சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கும் இந்த குறிப்பு பயன்படும்.

- Advertisement -