- Advertisement -
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமையான நாளாக இருக்கும். தலை குனிந்த இடத்தில், தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய வாய்ப்பு அமையும். உங்கள் மீது விழுந்த அவப்பெயர் விலகும் வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல பெயர் கிடைக்கும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும் நல்லது நடக்கும் நாள் இன்று.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இன்று விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதை தவிப்பது நல்லது. வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். வேலை வியாபாரத்தில் இருந்து வந்த அவ பெயர் நீங்கும். வீட்டிலிருக்கும் பெண்களுக்கும் மகிழ்ச்சி இரட்டிப்பாக கூடிய நாள். சுப செலவுகள் ஏற்படும். சுப காரிய தடைகள் விலகும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். சுக போக வாழ்க்கை இருக்கும். நேரத்திற்கு சாப்பாடு, நேரத்திற்கு தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக அமையும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்து உறவுகள் ஒன்று சேரும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று போட்டி பொறாமைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். உறவுகள் நண்பர்கள், உடன் வேலை செய்பவர்களோடு வாக்குவாதம் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத விஷயத்தில் தலையிடாதீர்கள். முன்கோபம் வேண்டாம். நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி கிடைக்கும். உற்சாகத்தோடு உங்களுடைய கடமைகளை செய்து முடிப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பூஜை புனஸ்காரங்களில் நேரம் போவதே தெரியாது. மனபாரம் குறையும். தேவையில்லாத கடன் சுமை நீங்கும். பணப்பிரச்சினை சரியாகும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். விவசாயிகளுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்யலாம். நல்லதே நடக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல விஷயங்கள் கைக்கூடி வரும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழுங்கள். சுப செலவுகள் ஏற்படும். காரிய தடை விலகும். இறைவனின் பரிபூரண அருளால் இன்று நீங்கள் நினைத்த நல்லது அனைத்தும் நடக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. வாரா கடன் வசூல் ஆகும். தேவைக்கு அதிகமாக பணம் இருக்கும். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடையலாம். எதிர்கால சேமிப்புக்கு முயற்சிக்கலாம் நல்லதே நடக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். வேலையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வை பேசி, சரி செய்து கொள்ளலாம். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மன கசப்பு சரியாகும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். இப்போது வாழ்க்கையில் நீங்கள் இருக்கும் நிலையில் இருந்து, அடுத்த ஒரு படி மேலே உயர, புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். நிச்சயம் நல்லது நடக்கும். தீராத பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். மனம் தெளிவு பெறும். இறைவனின் பரிபூரண அருளால் நல்லதே நடக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். பிரமோஷனுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. சக ஊழியர்களால் சின்ன சின்ன பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. அவர்களை மட்டும் கவனமாக கையாளவும்.

- Advertisement -