- Advertisement -
ராசி பலன் | Indraya rasi palan

இன்றைய ராசிபலன் – 21 அக்டோபர் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும். மகிழ்ச்சியில் ஒரு கிலோ எடை கூடுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. நீண்ட நாள் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். காரியத்தடை விலகும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணையோடு உங்களுடைய வாழ்க்கையை தொடர, நல்ல காலம் கூடி வந்து விட்டது. வீட்டில் கெட்டி மேல சத்தம் கேட்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

ரிஷபம்


ரிஷப ராசி காரர்களுக்கு இன்று புது முயற்சிகள் வெற்றி தரும். வேலையிலும், வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட தூர பயணங்களால் உடல் அசதி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். எதிரிகளோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம். எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு ஆதரவாக இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் போடுவதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வங்கி கடன் முயற்சிக்கலாம். வீட்டில் முதியவர்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நீண்ட தூர பயணங்களின் போது கவனம் தேவை.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சந்தோசம் இரட்டிப்பாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். சுப செலவுகள் ஏற்படும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். மனதில் நீண்ட நாள் தேக்கி வைத்திருந்த அன்பு பாசம் காதலை வெளிப்படுத்துவீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும். சுப காரியத்தடை விலகும். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. உடல் ஆரோக்கியம் இல்லாத உணவை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வீட்டில் சீக்கிரம் கெட்டி மேலே சத்தம் கேட்கும். தங்கம் வாங்கக் கூடிய யோகமும் கைகூடி வரும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தொல்லைகள் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நம்பிக்கையான நண்பர்கள் தானே என்று நம்பி யாரிடமும் எந்த பர்சனல் விஷயத்தையும் ஷேர் பண்ணாதீங்க. மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். கடன் கொடுக்க வேண்டாம். உறவுகளோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்கவும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சின்ன பின்னடைவு வரலாம். கூடா நட்பில் இருந்து விலகி இருங்கள். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். யாரிடமும் வம்பு வழக்கு வைத்துக் கொள்ள வேண்டாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். துணிச்சலாக செயல்படுவீர்கள். தைரியம் வெளிப்படும். மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேசுவீர்கள். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளது. ஈகோ வேண்டாம். குடும்ப விஷயத்தில் விட்டுக் கொடுத்து நடக்கவும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். மன அழுத்தம் குறையும். பண பிரச்சனை சரியாகும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு உண்டான வழி பிறக்கும். மாணவர்களுக்கு இளைஞர்களுக்கு இன்று முன்னேற்றம் இருக்கும். எதிரி தொல்லை விலகும். இரவு நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். முதலீட்டில் மட்டும் கவனம் தேவை. முன் பின் தெரியாத நபருக்கு கடன் கொடுக்க வேண்டாம். முன்பின் தெரியாத நபரிடம் கடன் வாங்க வேண்டாம்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் டென்ஷனான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். எந்த இடத்திலும் பொய் சொல்ல வேண்டாம். உங்களுடைய நேர்மை இன்று, உங்களை காப்பாற்றி விடும். உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். கடமையில் கவனத்தோடு இருங்கள்.

- Advertisement -