- Advertisement -
ராசி பலன் | Indraya rasi palan

இன்றைய ராசிபலன் – 26 அக்டோபர் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். ஆக்கப் பூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவம் வெளிப்படும். எதிரி தொல்லை விலகும். வேலையிலும் வியாபாரத்தையும் பின் தங்கிய நிலையில் இருந்தவர்கள் கூட, முன்னேறுவதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. தீபாவளி ஷாப்பிங் செய்ய விரும்புவர்கள், கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீட்டில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். பலவிதமான பிரச்சனைகள், பல விதமான எதிர் தொல்லை வந்தாலும் பொறுமை இழக்காமல் நடந்து கொள்வீர்கள். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும் நாள் இன்று.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். உங்களுடைய பர்சனல் விஷயங்களை எல்லோரிடமும் ஷேர் செய்ய வேண்டாம். மனதை அலைபாய விட வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. முக்கியமான வேலைகள் என்றால் குறிப்பிட்ட இடத்திற்கு 1/2 மணி நேரம் முன்கூட்டியே செல்ல வேண்டும். தாமதத்தால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். தேவையில்லாத கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பங்களில் இருந்து விடுபடக்கூடிய நாளாக இருக்கும். சந்தேகங்கள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற உத்வேகம் வரும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். புதிய நண்பர்களின் அறிமுகம் புது அனுபவத்தை கொடுக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பயம் பதட்டம் இருக்கும். புது முடிவுகள் எடுக்கும் போது ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். அனுபவ சாலிகளின் பேச்சைக் கேளுங்கள். உறவுகளோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம். கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வேண்டாம். ஈகோ இல்லாமல் இந்த நாளை கடந்து செல்லுங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சின்ன சின்ன எதிர்ப்புகள் போராட்டங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. நண்பர்களோடும் உறவுகளோடும் சண்டை போட வேண்டாம். வீண் விரைய செலவுகளை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். வீண் விரைய செலவுகள் குறையும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். உறவுகளின் வருகையால் இன்று வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை பளு கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் சந்தோஷமாக இந்த நாள் நகர்ந்துவிடும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். மகிழ்ச்சி வெளிப்படும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகள் விலகும். புது முயற்சிகள் வெற்றி தரும். புதிய முதலீடுகளுக்கு வங்கி கடன் முயற்சி செய்யலாம். நல்லதே நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் தொந்தரவு தரக்கூடிய நாளாக தான் இருக்கும். மனது சோர்வாக இருக்கும். செய்த தவறை எண்ணி வருத்தப்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன பின்னடைவு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். உறவுகளோடு பேசும்போது நிதானம் தேவை.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை தரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். ப்ரமோஷனுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

- Advertisement -