- Advertisement -

மேஷம்:

தந்தையை அனுசரித்துச் செல்வது நல்லது. மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். குருவருளால் புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

இந்த வார ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

- Advertisement -

ரிஷபம்:

சகோதர வகையில் அனுகூலம் ஏற்படும். சுறுசுறுப்பாக அனைத்து வேலைகளையும் முடித்து மேலதிகாரியின் பாராட்டுகளை பெறுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கணவன் – மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ தரிசனமும் மகான்களின் ஆசியும் கிடைக்கும்.

மிதுனம்:

- Advertisement -

தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். தாய் வழி உறவுகளிடம் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். திருவாதிரை சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும்.

கடகம்:

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். புதிய காரியங்களை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

சிம்மம்:

- Advertisement -

மாலையில் உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். இன்று உங்களுக்கு மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

கன்னி:

நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். சிலருக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவி இடையில் சிறுசிறு விவாதங்கள் ஏற்படக்கூடும். முக்கிய பிரமுகர்களின் நட்பும், அவர்களால் ஆதாயமும் உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படக்கூடும்.

துலாம்:

வீடு மனை வாங்க நினைத்த முயற்சி சாதகமாக முடியும். புதிய முயற்சி எதுவும் இன்றைக்கு வேண்டாம். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்

விருச்சிகம்:

நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். மாலையில் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வீடு, மனை சம்பந்தப்பட்ட முயற்சிகளில் பொறுமை அவசியம். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும்.
தனுசு:

நண்பர்களிடமிருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும் சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும்.

மகரம்:

சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் நன்மை உண்டாகும்.

கும்பம்:

சந்திரனால் மனதில் சிறு சலனம் ஏற்படக்கூடும். தாய்மாமன் வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். சகோதர வகையில் சிற்சில சங்கடங்கள் ஏற்பட்டு சரியாகும். மனம் உற்சாகமாக இருக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.

மீனம்:

பிற்பகலுக்கு மேல் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.. மாலை நேரத்தில் சிறுவயது நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும்.சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

உங்கள் நாள் மேலும் சிறப்படைய இந்த ராசி பலன் உங்களுக்கு உதவும் என நம்புகிறோம்.

- Advertisement -