- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை தேவை. எந்த விஷயமாக இருந்தாலும் நின்று நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். முன்கோபடாதீர்கள், அவசரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு பின்பு உங்களுக்கே ஆபத்தை கொடுத்து விடும். கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பொறுமை காக்கவும். எதிரிகளோடு நேராக மோதாதீர்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று எல்லா வேலையிலும் ஆர்வமாக இருப்பீர்கள். சிறிய தவறு சொல்லி கூட உங்களை சுட்டிக்காட்ட முடியாது. மேல் அதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. கட்டுமான தொழில் உயர்ந்து நிற்கும். நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். விடுமுறையில் இருக்கக்கூடிய மாணவர்கள் உங்களுடைய கல்வித்திறனை உயர்த்திக் கொள்ள ஏதாவது புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும் நிதிநிலைமை சீராகும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுத்து நிம்மதி அடைவீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தொடங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகிவிடும். தாய்மாமன் வழி உறவால் ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் தங்கள் மேல் படிப்புக்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று சற்று உடல் சோர்வு இருக்கும். விடுமுறை நாள் என்பதால் வீட்டு வேலைகளை சமாளிக்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தை கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் வேலை வேலை என்று இல்லாமல் உங்களுடைய உடல் நலனிலும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வந்தாலும் அதை சரி செய்யும் திறன் இன்று உங்களுக்கு தானாக வந்துவிடும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து தொலைபேசியின் மூலம் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். எதிரியாக இருந்தாலும் பொறுமையாக பேசுங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று பொறுப்போடு நடந்து கொள்வீர்கள். உங்களை நம்பி ஒப்படைத்த காரியத்தை எத்தனை மணி நேரம் ஆனாலும் இருந்து முடித்துக் கொடுப்பீர்கள். இதனால் நல்ல பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்குத்தான். நீங்கள் நினைத்ததை சாதிக்க கூடிய நாளாக இன்றைய நாள் உங்களுக்கு அமையும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப அமைதியான நாளாக செல்ல போகின்றது. எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இருக்காது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வருமானம் சீராகும். நிதி நிலைமை சீராக இருக்கும். சேமிப்பை அதிகரிக்க உண்டான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும்‌. கையில் எடுத்த முயற்சிகளில் வெற்றி காணலாம். நீண்ட தூர பயணத்தின் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். உங்களுடைய உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். சின்ன சின்ன பொருட்கள் திருடு போவதற்கு வாய்ப்பு உள்ளது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று புகழ் வீடு தேடி வரும். எதிர்பாராத பண வரவு மன அமைதியை ஏற்படுத்தும். நீண்ட நாள் பண பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு தான். எதிரிகளும் நண்பர்களாக மாறிவிடுவார்கள். ஒரு நல்லது நடக்கும் போது, நாலு நல்லது சேர்ந்து நடக்கும் என்று சொல்லுவார்கள் அல்லவா. அதுபோல இன்று உங்களுக்கு பல நன்மைகள் நடக்கக்கூடிய நாள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகக்கூடிய நாளாக இருக்கும். இந்த நாள் கொஞ்சம் சுமாரான நாளாக தொடங்கினாலும், இந்த நாள் இறுதியில் நீங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். அதற்கான திறமையும் இறைவனின் ஆசிர்வாதமும் உங்களிடத்தில் இருக்கிறது. வியாபாரத்திற்காக முயற்சி செய்த கடன் தொகை கிடைக்கும். வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உண்டான முயற்சிகளில் ஈடுபடலாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எதிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். அடுத்தவர்களுடைய பாராட்டு உங்கள் மனதை சந்தோஷப்படுத்தும். எதையும் சாதித்து விடலாம் என்ற தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுக்கும். சேமிப்புக்கு உண்டான வேலைகளை இன்று தொடங்குவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூழக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. குடும்பத்துடன் நேரத்தை சந்தோஷமாக செலவு செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மேனேஜர் தொல்லை விலகும். பிக்கல் பிடுங்கள் நீங்கும். வருமானம் சீராக இருக்கும். செலவுக்கு ஏற்ற வரவு கையில் இருக்கும். ஜாம் ஜாம் என்று செலவு செய்து, ஜாம் ஜாம் என்று இன்னைக்கு வாழ போறீங்க.

- Advertisement -