
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்த முயற்சிகள் மேற்கொள்ளலாம். வங்கி கடன் முயற்சிக்கலாம். நீண்ட தூர பயணங்களால் கொஞ்சம் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மற்றபடி இந்த நாள் இனிய நாளாக இருக்கும்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். நல்ல பெயர் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். தலை குனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். உங்கள் மீது விழுந்த பழி விலகும். இரவு நிம்மதியான தூக்கம் கிடைக்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும்.
மிதுன ராசிக்காரர்கள் இன்று எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. பொறுமையாக சிந்தித்து செயல்பட வேண்டும். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். உயர் அதிகாரிகளோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். பஞ்சாயத்து வழக்கு என்று செல்ல வேண்டாம். அமைதியாக இருந்தாலே இந்த நாள் சுமூகமாக இருக்கும்.
கடக ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். உங்களுடைய வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். நீண்ட தூர பயணங்களால் நன்மை நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். சொந்த பந்தங்களோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன கவலை இருக்கும். உடல் சோர்வு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் ஆர்வம் இருக்காது. முதியவர்கள், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.
கன்னி ராசிக்காரர்கள் இன்று பலவிதமான பிரச்சனைகளை கடக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். எந்த இடத்திலும் பொய் சொல்ல வேண்டாம். நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் எந்த ஒளிவு மறைவும் தேவையில்லை. குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உத்வேகம் பிறக்கும். சுறுசுறுப்பு இருக்கும். உங்களுடைய வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். சோம்பேறித்தனத்திலிருந்து விடுபட்டு வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில், நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கும் நாள் இன்று.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். பண்டிகையை கொண்டாட தயாராகி விடுவீர்கள். வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன பின்னடைவு வரலாம். இருந்தாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது.
மகர ராசிக்காரர்களுக்கு சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புது முயற்சிகளை இன்று மேற்கொள்ள வேண்டாம். இருக்கும் வேலையில் மட்டும் அக்கறை காட்டினால் போதும். நீண்ட தூர பயணங்களை தவிர்த்து விடுங்கள். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது. பஞ்சாயத்துகள் வழக்குகள் பிரச்சனைகளை நாளை வைத்துக் கொள்ளுங்கள்.
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். தெரியாத நபருக்கு கடன் கொடுக்க வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க கூடாது. உங்களுடைய பொருட்களை நீங்கள்தான் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகள் எல்லாம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே முடிந்துவிடும். தேவையில்லாத டென்ஷன் குறையும். பிள்ளைகளோடும் மனைவியுடனும் இன்று நீண்ட நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.