- Advertisement -
ராசி பலன் | Indraya rasi palan

இன்றைய ராசிபலன் – 29 நவம்பர் 2025

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். சிக்கலான பிரச்சனைக்கு தீர்வு காண இந்த நாளை பயன்படுத்திக்கோங்க. இழுபறியாக இருந்து வந்த கோர்ட் கேஸ் வழக்குகள் இன்று ஒரு முடிவுக்கு வரும். கூடுமானவரை நீண்ட தூர பயணத்தை மட்டும் தவிர்த்துக் கொள்வது நல்லது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். எந்த விஷயத்திற்கும் துவண்டு போகக்கூடாது. போராடிய கூடிய குணம் வெளிப்பட வேண்டும். எல்லா விஷயத்திலும் கவனமாக இருந்து கொள்ளுங்கள். மனதை தளர விடாதீர்கள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஓய்வு எடுக்க வேண்டும். தேவை இல்லாத வேலையால் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. உணவுப் பழக்க வழக்கத்திலும் கட்டுப்பாடு தேவை. மற்றபடி எல்லா விஷயங்களும் நல்லபடியாக நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கல்கள் வரக்கூடிய நாளாக இருக்கும். தேவையில்லாத அடுத்தவர்களுடைய கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். கவனமாக செயல்படுங்கள். மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூலாகும். நிதிநிலைமை சீராகும். சொத்து சுகம் வாங்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. மழை நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். காயம் படாமல் உங்களை, நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுகபோக வாழ்வு இருக்கும். சென்ற இடமெல்லாம் ராஜமரியாதை கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். அந்தஸ்து உயரக்கூடிய நாள். பெயர் பட்டம் புகழ் பதவி கிடைக்கக்கூடிய நாள். மனம் மகிழ்ச்சி சந்தோஷம் எல்லாம் உங்களைத் தேடி வரும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். இன்றைக்கான வேலையை, இன்றே முடித்து விட வேண்டும். நேரத்தை வீணடிக்காமல் இருப்பது இந்த நாளுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. பெரியவர்கள் பேச்சை கேட்டு நடக்க வேண்டும். அனுபவசாலிகளின் பேச்சை அவமதிக்கக் கூடாது.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மகிழ்ச்சி வெளிப்படும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சட்டை சச்சரவுகள் ஒரு முடிவுக்கு வரும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று தடைகள் தடங்கல்கள் உண்டாகும். சோதனைகளை எதிர்கொள்ள வேண்டிய நாள். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வண்டி வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நன்மைகள் நடக்கும். டென்ஷன் குறையும். வியாபாரத்தில் இருந்து வந்த நஷ்டம் லாபமாக மாறும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக முடியும். உங்களுடைய பகுதியில் மழை இருந்தால் மட்டும் பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். தெரியாத விஷயங்களில் கால் வைக்க வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருங்கள். நிறைய பணத்தை செலவு செய்து எந்த பொருளையும் வாங்காதீங்க.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மனக்கவலை நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் டென்ஷன் இருக்கும். டார்கெட்டை முடிக்காதவர்களுக்கு கொஞ்சம் பிரஷர் அதிகமாகவே இருக்கும். கவனமாக இருந்துக்கோங்க. வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை, வீட்டில் காட்டிக்கொள்ள வேண்டாம்.

- Advertisement -