- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நாலு பேர் ஒன்று கூடி இருக்கும் இடத்தில் உங்களுக்கு மட்டும் உயர்வான மரியாதைகள் கிடைக்கும். நீங்கள் மட்டும் தனித்துவமாக தெரிவீர்கள். அந்த அளவுக்கு உங்களுடைய திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். கலைஞர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றம் தரும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். அடுத்தவர்கள் உங்களுடைய மனதை காயப்படுத்தலாம். தேவையில்லாத வாக்குவாதம் வம்பு தும்புகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். பிரச்சனை என்று வந்தால் முன்கோபடாதீர்கள். பொறுமை காக்கவும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க பாருங்கள். அனாவசியமாக பேசாதீங்க. அமைதியாக இருந்தால் இன்றைய நாள் சிறப்பாக நகரும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். ஆரோக்கியமான நாளாக இருக்கும். வழக்கம் போல உங்களுடைய வேலைகளை எல்லாம் நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் ஆசீர்வாதத்தை பெறுவதற்கு உண்டான சந்தர்ப்பங்கள் கிடைக்கும். தொழிலில் வந்த சின்ன சின்ன பிரச்சனைகள் எல்லாம் விலகும். கடன் சுமை குறையும். தேவையான அளவுக்கு வருமானம் இருக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக இது நடக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த விஷயத்தில் வெற்றி காண்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நல்லது நடக்கும். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். முதலீடு செய்யும் போது கவனமாக இருங்க. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் சிக்கல்கள் வரும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். தான தர்மம் போன்ற காரியங்களில் ஈடுபடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அடுத்தவர்களுக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணமாக இருக்கக்கூடிய நல்ல காரியங்கள் இன்று நடக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று நிதானமாக பொறுமையோடு செயல்பட வேண்டும். எந்த ஒரு விஷயத்துக்கும் அவசரப்படக்கூடாது. யாரோ ஒருவர் சொல்கிறார்கள் என்பதற்காக முன்பின் தெரியாத தொழிலை தொடங்குவது, முன்பின் தெரியாத இடத்தில் பணத்தைக் கொண்டு போய் கட்டுவது, போன்ற எந்த தவறையும் செய்து விடாதீர்கள். அனுபவ சாலிகளை நம்புங்கள். உங்களுக்கு நல்லது சொல்லும் நாலு பேரை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். உடல் சோர்வு இருக்கும். ஒரு வேலையை கையில் எடுத்தவுடன் சரியாக முடிக்க முடியாமல் திணறுவீர்கள். இதனால் மேலதிகாரிகளிடம் திட்டு வாங்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். உடனே மனசு சோர்ந்து போகக்கூடாது. ஒரு நாள் ஏற்ற இறக்கங்களோடு தான் இருக்கும். அதை சமாளித்து கடந்து போய்க் கொண்டே இருங்கள். உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் இருக்கு.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பல சோதனைகள் வரும். அந்த சோதனையை கடந்தால் தான் சாதனை என்று சூழ்நிலை இருக்கும். ஆனால் நீங்களும் அவ்வளவு லேசில் முயற்சிகளை கைவிட மாட்டீர்கள். எப்படியோ முட்டி மோதி போராடி எடுத்த காரியத்தில் ஜெயித்து விடுவீர்கள். சோதனைகள் வரும்போது கடவுள் நமக்கு சில அனுபவங்களையும் சேர்த்துக் கொடுப்பார். அதனால் சோதனை வந்துவிட்டதே என்று கவலை படாதீங்க. வாழ்க்கையில் இன்னும் நீங்கள் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று என்னதான் வேலை செய்தாலும் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்காது. இதனாலேயே கொஞ்சம் டென்ஷன் கூடும். செய்யக்கூடிய வேலையில் இருந்து அப்படியே ஓடி விடலாம் என்று கூட நினைப்பீர்கள். ஆனால் அப்படியெல்லாம் அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. கொஞ்சம் நிதானமாக சிந்தியுங்கள். புது வேலை கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. சில நாள் பிரச்சனைகள் வரத்தான் செய்யும் அதை அனுசரித்து செல்லக்கூடிய பக்குவத்தை வர வைத்துக் கொள்ளுங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கப்போகிறது. நீண்ட நாள் துன்பங்கள் துயரங்கள் எல்லாம் உங்களை விட்டு விலகும். தொல்லை கொடுத்து வந்த நபர்கள் உங்களை விட்டு வெகு தூரம் செல்வார்கள். அப்பாடா ரொம்ப ரொம்ப நிம்மதி. இவன் தொல்லை இனி கிடையாது என்று பெருமூச்சு விடுவீர்கள். அப்படி ஒரு சம்பவம் நடப்பதற்கு இன்று வாய்ப்புகள் உள்ளது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சண்டை சச்சரவு நிறைந்த நாளாக இருக்கும். தேவை இல்லாமல் எல்லாரையும் பகைத்துக் கொள்ளும்படி பேசப் போகிறீர்கள். இதனால் பிரச்சனை இரட்டிப்பாகமே தவிர, பிரச்சனை சரியாக போவது கிடையாது. எதிரியாக இருந்தாலும் துரோகியாக இருந்தாலும் அவனை கைக்குள் போட்டுக் கொள்ளும் வித்தையை கற்றுக் கொள்ளுங்கள். குள்ளநரி வேலையை செய்தால் தான் இன்று நீங்கள் வாழ்க்கையில் பிழைக்க முடியும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிக்கான நாளாக இருக்கும். நீண்ட நாள் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். மனைவி தொல்லையை தவிர. என்னதான் நல்லது செய்தாலும் வீட்டில் மட்டும் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்காது. கொஞ்சம் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். நல்லது நடக்கும். இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும். செலவை குறையுங்கள். சேமிப்பை அதிகப்படுத்துங்கள்.

- Advertisement -