
ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு விதமான பிரச்சனைக்கும் அடிப்படை காரணமாக திகழ்வது பணம் மட்டுமே. பணத்தேவை பூர்த்தி அடையும் பொழுது குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமுதாயத்தில் நல்ல மதிப்பு ஏற்படும். ஒரு குழந்தை பிறப்பது முதல் அந்த குழந்தை இறப்பது வரை ஒவ்வொரு நிலையிலும் பணம் என்பது கண்டிப்பான முறையில் தேவைப்படக்கூடிய ஒன்றாக தான் திகழ்கிறது. இந்த பணத்தேவை அனைவருக்கும் பூர்த்தி அடைவது கிடையாது.
பல நேரங்களில் பலருக்கு தங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய பணவரவு கூட இல்லாமல் கஷ்டப்படும் அதனால் பிறரிடம் இருந்து கடன் வாங்குவார்கள். அப்படி வாங்கிய கடனை திருப்பி அடைத்து அதிலிருந்து வெளியே வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். இன்னும் சிலரோ தங்களிடம் இருக்கக்கூடிய பொருட்களை அடமானம் வைத்து அதன் மூலமாக தங்களுடைய பண தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள். திரும்பவும் அந்த பொருட்களை அடமானத்திலிருந்து மீட்பதற்காக பல போராட்டங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் வரும்.
இன்னும் சிலருக்கோ அதை திருப்பவே முடியாமல் மூழ்கும் நிலையும் ஏற்படும். இப்படி பண பிரச்சனையால் கடன் வாங்கியோ அல்லது பொருட்களை அடமானம் வைத்தோ, அதை திரும்ப மீட்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள் எந்த மூட்டையை பூஜையறையில் வைத்து வழிபட்டால் அவர்களுடைய பண பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக நீங்கும் இன்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒரு விதையிலிருந்து செடி வளர்வதற்கு முன்பாக அந்த விதையிலிருந்து வேர் வரும். வேர் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அந்த செடியும் உறுதியாக இருக்கும். எவ்வளவு பெரிய காற்று அடித்தாலும் மழை பெய்தாலும் வேர் வலிமையாக இருக்கும் பட்சத்தில் அந்த செடிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. அப்படிப்பட்ட செடிதான் வளர்ந்து பெரிய விருச்சமாக மாறும்.
இதே போல் தான் ஒருவருடைய குடும்பத்தில் பண தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு ஏற்பட்டால் அந்த குடும்பத்தில் எப்பேர்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் அவை அனைத்தையும் சரி செய்து விட்டு நல்ல நிலைக்கு முன்னேற முடியும். அப்படிப்பட்ட பண தேவைகளை பூர்த்தி செய்து பணப்பிரச்சனையில் இருந்து வெளியே வருவதற்கு மரத்தின் வேரை வைத்து எப்படி பரிகாரம் செய்வது என்று பார்ப்போம்.
இந்த பரிகாரத்தை பௌர்ணமி தினத்தன்று தான் செய்ய வேண்டும். அரச மரத்தின் வேர் சிறிதளவும், ஆலமரத்தின் வேர் சிறிதளவும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆயுதங்களை பயன்படுத்தி வேரை எடுக்கக் கூடாது. கைகளாலோ அல்லது கற்களாலோ தான் வேரை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய துண்டாக இருந்தாலும் பரவாயில்லை.
ஒரு பட்டுத் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அது முடிந்த அளவிற்கு பச்சை அல்லது மஞ்சள் நிறமாக இருப்பது சிறப்பு. அந்த துணியில் நாம் எடுத்து வந்த வேரை மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தம் செய்துவிட்டு ஈரம் இல்லாமல் துடைத்து வைக்க வேண்டும். அடுத்ததாக இதனுடன் ஏழு ஒரு ரூபாய் நாணயங்கள், ஏழு பட்டை, ஏழு ஏலக்காய், பச்சை கற்பூரம் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மூட்டையாக கட்டி உங்கள் வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும்.
தினமும் இந்த மூட்டைக்கு தீப தூப ஆராதனை காட்ட வேண்டும். இப்படி நீங்கள் செய்ய ஆரம்பித்த அந்த பௌர்ணமி தினத்திலிருந்து ஏழு பௌர்ணமி தினங்களுக்குள் உங்களுடைய பண பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக நீங்கும். கடனால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த கடன் சுமையிலிருந்து வெளியே வருவார்கள். அடமானத்தில் வைத்த பொருட்களை சிறிது சிறிதாக மீட்கும் சூழ்நிலையும் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: சொந்த வீடு கட்ட சொல்ல வேண்டிய மந்திரம்
மிகவும் எளிமையான இந்த தாந்ரீக வேர் பரிகாரத்தை பணப்பிரச்சினையால் தவித்துக் கொண்டு இருப்பவர்கள் செய்து முழு பலனையும் பெறலாம்