- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள அழகு குறிப்பு

- Advertisement -

அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் யாரும் ஏசி ரூமில் இருந்தது கிடையாது. அன்றாடம் தினமும் வெயிலில் சென்று வயலில் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள். இருப்பினும் அவர்களுடைய முகத்தை பார்க்கும் பொழுது புத்துணர்ச்சியுடனே தெரியும். அதற்காக அவர்கள் ஏதாவது பியூட்டி பார்லர் சென்றார்களா? கிடையாது. வீட்டில் அன்றாடம் உபயோகப்படுத்தக்கூடிய பொருட்களை வைத்தே அது அழகை மேம்படுத்தும் என்பதை அறியாமலேயே உபயோகப்படுத்தி தங்கள் அழகை தக்க வைத்துக் கொண்டனர். அந்த வகையில் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதி வீட்டில் இருக்கக்கூடிய தக்காளி மற்றும் மஞ்சள் தூளை வைத்து எப்படி அழகை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று தான் பார்க்க போகிறோம்.

ஒவ்வொரு வீட்டிலும் மருத்துவமனை இருக்கிறது. அதேபோல்தான் அழகு நிலையமும் இருக்கிறது. மருத்துவமனை என்று கூறுவது நம் வீட்டில் இருக்கக்கூடிய சமையலறை. சமையலறையில் இல்லாத மருந்தே கிடையாது என்று சித்தமருத்துவத்தில் கூறுவார்கள். அதே போல் தான் சமையல் அறையில் இல்லாத அழகை மேம்படுத்தும் பொருட்களே கிடையாது என்று தான் கூற வேண்டும்.

- Advertisement -

இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பல அற்புதமான பொருட்கள் நம்முடைய சமையல் அறையில் இருக்கின்றன. அதை நாம் முறையாக பயன்படுத்தினால் நல்ல பலனை பெற முடியும். பொதுவாக பலருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது கருமை தான்.

வெயிலில் சென்று விட்டு வந்தவுடன் முகம் கருமையாகி விடுவது தான். இதற்காக பலரும் வெளியில் கிளம்புவதற்கு முன்பாக சன் ஸ்கிரீன், சன் லோஷன் என்று பலவற்றை தடவிக் கொண்டு செல்வார்கள். இதை செய்வதை தவிர்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்ததும் அரை தக்காளி பழத்தை நன்றாக சாறு எடுத்து அதில் தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே வைத்திருந்து பிறகு முகத்தை கழுவினால் போதும் முகத்தில் இருக்கக்கூடிய கருமைகள் நீங்குவதோடு சருமம் பொலிவாகவும் தென்படும்.

- Advertisement -

அடுத்ததாக நம்முடைய சமையல் அறையில் இருக்கக்கூடிய மஞ்சள் தூள். ஒரு ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேனையும் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். இவ்வாறு தடவுவதன் மூலம் முகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். கருமை நீங்கும். பருக்கள் ஏற்படாது. பருக்கள் ஏற்பட்டிருந்தாலும் அதனால் ஏற்பட்ட கரும்புள்ளிகளும் நீங்கும். முகம் பொலிவுடன் பிரகாசமாகவும் நல்ல நிறமாகவும் தோற்றமளிக்க இந்த ஃபேஸ் பேக் உதவி செய்யும்.

இதையும் படிக்கலாமே: 15 நிமிடத்தில் பொலிவான முகத்தை பெற ஃபேஸ் பேக்

மிகவும் எளிதில் அனைவரின் சமையல் அறையிலும் இருக்கக்கூடிய இந்த பொருட்களை பயன்படுத்தி நம்முடைய முகத்தை சூரியனின் ஒளிக்கதிர்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். மேலும் அழகாகவும் பொலிவாகவும் திகழ முடியும். விருப்பம் இருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -