
சில ஸ்டார் ஹோட்டல்களில் தக்காளி சூப் மிக மிக க்ரீமியாக கிடைக்கும். குறிப்பா ஸ்டால் ஹோட்டலில். ஹோட்டலில் கிடைக்கும் சூப்பின் அந்த சுவை சில பேருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அப்படிப்பட்ட ஒரு கிரீமையான தக்காளி சூப் ரெசிபியை தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம். சாயங்கால நேரத்தில் இப்போது இருக்கும் லேசான குளிருக்கு இந்த சூப் சூப்பரா இருக்கும். இதில் ரஸ்கை தொட்டு சாப்பிட்டாலும் அட்டகாசமாக இருக்குமே பாத்துக்கோங்க. நாவிற்கு ருசி தரும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அருமையான ஒரு சூப் ரெசிபி இதோ உங்களுக்காக.
அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். அதில் நறுக்கிய தக்காளி பழம் 5, வரமிளகாய் 1, தோல் உரித்த பூண்டு பல் 5, நறுக்கிய சின்ன சைஸில் இருக்கும் பெரிய வெங்காயம் 1, தோல் சீவி நறுக்கிய மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு 1, இது மூழ்கும் அளவுக்கு தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு, குக்கரை மூடி ஐந்து விசில் வைக்க வேண்டும்.
விசில் வந்து பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து நன்றாக ஆற வைத்து இதை மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் மீண்டும் ஒரு கடாயை வைத்து 1 டேபிள் ஸ்பூன் பட்டர்(வெண்ணெய்) விட்டு, அதில் கடுகு 1/2 ஸ்பூன் போட்டு, தாளித்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் சூப்பை வடிகட்டி இதில் ஊற்ற வேண்டும். (ஓரளவுக்கு பெரிய சல்லடை உள்ள பில்டரில் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். புளி வடிகட்ட ஸ்டீல் பில்டர் வைத்திருப்போம் அல்லவா அதில் வடிகட்டினால், சுலபமாக இதை வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம்.)
வடிகட்டிய இந்த சூப்போடு இன்னும் கொஞ்சம் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, நாட்டு சர்க்கரை அல்லது வெள்ளை சர்க்கரை 1 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் 1 டேபிள் ஸ்பூன், போட்டு இரண்டு கொதி விட்டு மேலே மல்லித்தழை தூவி, அப்படியே பௌலில் பரிமாறினால் சூப்பரான சுவையில் கிரீமையான சூப் தயார்.
இதில் சாதாரண சூப்பு போல நிறைய தண்ணீரை ஊற்றி விடக்கூடாது. குடிக்கும் பக்குவத்திற்கு சூப் இருந்தால் போதும். கொஞ்சம் திக்காகத்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் சூப் கிரீமியான சுவை தரும்.
அப்படியே இந்த சூப்பில் ஒரு ரஸ்கில் தொட்டு சாப்பிட்டு பாருங்கள். அத்தனை ருசி இருக்கும். சுட சுட இந்த சூப்புக்கும் குளிர் காலத்திற்கும் அப்படி ஒரு காம்பினேஷன். இதன் மேலே பிரஸ் கிரீம் தேவைப்பட்டால் டிசைன் போட்டுக் கொள்ளுங்கள். உங்கள் வயிறு கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த சூப்புக்கு அவ்வளவு சுவையா. ஒரு முறை உங்க வீட்ல ட்ரை பண்ணி தான் பாருங்களேன். மேலே தேவைப்பட்டால் கான் சிப்ஸ் தூவிக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம்.
பின்குறிப்பு: சில பேருக்கு இதில் உருளைக்கிழங்கு சேர்க்க பிடிக்காது. உருளைக்கிழங்கு வாயு என்று சொல்பவர்கள். உருளைக்கிழங்கை போடாமலும் இந்த சூப் சூப்பராக இருக்கும். வெண்ணைக்கு பதிலாக ரீபண்ட் ஆயிலில் கூட இந்த சூப்பை தாளித்துக் கொள்ளலாம். அதுவும் உங்களுடைய விருப்பம் தான்.