முட்டை கிரேவியை வித்தியாசமா இப்படி செய்து பாருங்க. சிக்கன் கிரேவியே தோத்து போய்டும் அந்த அளவுக்கு டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இது சப்பாத்தி, சாதம் என எல்லாத்துக்கும் செம்மையா இருக்கும்

- Advertisement -

பெரும்பாலும் அனைவரின் வீட்டிலும் முட்டை எப்போதுமே இருக்கும். ஏனென்றால் வீட்டில் எதுவும் இல்லாத நேரத்தில் கூட சட்டென்று ஏதாவது செய்ய நினைக்கும் போது முட்டையை வைத்து நாம் அந்த வேளை உணவை முடித்து விடுவோம். அந்த அளவிற்கு முட்டை சிம்பிளாக செய்யக் கூடிய உணவு. அது மட்டும் இன்றி முட்டை வைத்து சாப்பிடும் போது அசைவை உணவு சாப்பிட்டது போன்ற திருப்தியும் இருக்கும். அப்படியான முட்டையை வைத்து ஒரு அருமையான முட்டை கிரேவியை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

முட்டை -4, வெங்காயம் -2, இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள் -11/2 டேபிள் ஸ்பூன், தனியா தூள் -1 1/2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன், உப்பு -1/2 டீஸ்பூன், தயிர்- 1/4 கப், கருவேப்பிலை -1 கொத்து, சீரகம் -1 டீஸ்பூன், எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், சிக்கன் மசாலா – 1/2 டீஸ்பூன், கொத்தமல்லி -1 கைப்பிடி.

- Advertisement -

செய்முறை

இந்த முட்டை கிரேவி செய்வதற்கு முதலில் முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து பேன் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து விட்டு அரை ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் தனியாத்தூள், கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து எண்ணெயில் லேசாக வதக்கி விடுங்கள். அதன் பிறகு வேக வைத்த முட்டையின் மீது லேசாக கீறி இந்த மசாலாவில் சேர்த்து சிவந்து வரும்படி பிரட்டி இதை தனியாக எடுத்து வைத்து விடுங்கள்.

அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து மீதம் இருக்கும் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், சீரகம் சேர்த்து பொரிந்த பிறகு கருவேப்பிலை சேர்த்து விடுங்கள். அதன் பிறகு வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து வெங்காயம் பாதியளவு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு முறை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இவை எல்லாம் நன்றாக வதங்கிய பிறகு மிளகாய் தூள், தனியா தூள் சிக்கன் மசாலா, மஞ்சள் தூள், உப்பு என அனைத்தையும் சேர்த்த பிறகு தயிரையும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இந்த கிரேவிக்கு தக்காளிக்கு பதில் நாம் தயிர் சேர்த்து செய்கிறோம். இப்படி செய்யும் போது சுவை மிகவும் அருமையாக இருக்கும்.

இவையெல்லாம் சேர்ந்து பச்சை வாடை நீங்கியவுடன் கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி வறுத்து வைத்த முட்டையை சேர்த்துப் பிறகு10 நிமிடம் மூடி போட்டு கொதிக்க விடுங்கள். பத்து நிமிடம் கழித்து கிரேவியில் எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். அருமையான முட்டை கிரேவி தயார்.

இதையும் படிக்கலாமே: 1 கப் பச்சரிசி மாவு இருந்தால் போதுமே. வெறும் 15 நிமிடத்தில் இந்த ரிங் முறுக்கு தயார். அதுவும் பேக்கரி ஸ்டைலில்.

இது சப்பாத்தி, பூரி, பரோட்டா அனைத்திற்குமே அருமையான சைட் டிஷ். அதுமட்டுமின்றி சுட சுட சாதத்துடன் இந்த முட்டை கிரேவி வைத்து சாப்பிடும் பொழுது சிக்கன் குழம்பு சாப்பிட்டது போல ஒரு அருமையான ருசியில் இருக்கும். நீங்களும் உங்க வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -