- Advertisement -
ஜோதிடம்

எந்த சூழ்நிலையிலும் சுயநலம் இல்லாமல் மற்றவர்களை பற்றி சிந்திக்கக்கூடிய 5 ராசிகள்? உங்க ராசியும் இதில் இருக்கிறதா?

12 ராசிகளில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள் இருக்கும். ஒரு சிலர் தன்னைப் பற்றி மட்டுமே சதா சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு ஒரு பொழுதும் மற்றவர்களைப் பற்றிய கவலை என்பதே இருப்பதில்லை. ஆனால் ஒரு சிலரோ எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கூட தன்னை பற்றி சிந்திக்காமல் மற்றவர்களைப் பற்றிய சிந்தனையில் இருப்பார்கள். அப்படிப்பட்ட ராசிகளில் டாப் 5 ராசிகள் யாரெல்லாம்? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் இயல்பாகவே கொடை உள்ளம் கொண்டவர்கள். மற்றவர்கள் கண்ணீர் சிந்தினால் இவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது. மற்றவர்களுடைய கஷ்டம் தன் கஷ்டமாகவே எண்ணி வருத்தம் கொண்டு இருப்பார்கள். யார் உதவி என்று கேட்டாலும், உடனே தவறாமல் செய்து விடுவார்கள். மற்றவர்களுடைய கருத்துக்களுக்கும் முன்னுரிமை கொடுத்து சரிசமமாக அனைவரையும் நடத்துவார்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்கள் எப்பொழுதும் மற்றவர்கள் மீது அக்கறையுடனும், அன்புடனும் இருக்கக் கூடியவர்கள். சிறுவயது முதலே கஷ்ட, நஷ்டங்களை சந்தித்து வந்த இந்த ராசிக்காரர்கள் எதற்காகவும் மற்றவர்களை கஷ்டப்படுத்தி பார்ப்பதை விரும்புவதில்லை. தன்னை நம்பி வந்தவர்களுக்கு எப்பொழுதெல்லாம் உதவி தேவையோ! அப்போதெல்லாம் கூடவே இருந்து உதவி செய்வார்கள். என்னதான் ஒருவர் தன் குறைகளை இன்னொருவரிடம் கூறினாலும் அதை கேட்பதற்கு ஒரு மனம் இருக்க வேண்டும். அப்படியான மனம் கொண்டவர்கள் கடக ராசிக்காரர்கள். இவர்களிடம் எதை வேண்டுமானாலும் மனம் விட்டு பேசலாம்! இதனால் இவர்களை நண்பர்களாக பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் பிறப்பு முதலே தன்னைப் பற்றிய சிந்தனை இல்லாமல் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை? என்பதில் அக்கறையுடன் இருப்பார்கள். தாயுள்ளம் கொண்ட கன்னி ராசிக்காரர்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல. அதே சமயத்தில் உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கு ஓடி சென்று உதவி செய்பவர்களில் முதன்மையானவர்களாக இருப்பார்கள். தங்களுக்கு பிடித்தமானவர்களை எதற்காகவும் யாரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். சமூகம் சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர்கள். எதையும் தாங்கும் இதயம் இவர்களிடம் இருக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் எதிலும் நேர்மையுடனும், நியாயத்துடனும் இருக்க வேண்டுமென்று நினைக்கக் கூடியவர்கள். தன்னை நேசிப்பவர்களை அதை விட பன்மடங்கு அதிகமாக அன்பை செலுத்தி அக்கறையோடு பார்த்துக் கொள்வார்கள். துலாம் ராசியின் மிகப்பெரிய சொத்தாக இருக்கும் ஒரு விஷயம் என்ன தெரியுமா? இந்த ராசிக்காரர்கள் யாரைப் பற்றியும் தவறாக நினைக்க மாட்டார்கள்! ஒருவர் தவறே செய்திருந்தாலும் கூட அவர் ஏன் அப்படி செய்து இருப்பார்? என்று அவர்கள் இடத்தில் நின்று யோசிப்பார்கள். எந்த சூழ்நிலையிலும் தன்னை நம்பி வந்தவர்களை கைவிட மாட்டார்கள். தன் இன்னுயிரையும் கொடுத்து அவர்களுடைய உயிரை காப்பாற்றுவார்கள்.

மீனம்:

மீன ராசிக்காரர்கள் தன்னைப் பற்றி யோசித்தாலும் அதைவிட மற்றவர்களுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் சிறிதும் தயக்கம் காட்ட மாட்டார்கள். வார்த்தையில் கனிவும், உள்ளத்தில் தூய்மையும் கொண்டு இருப்பார்கள். கண்களில் ஈரம் இல்லை என்றாலும் மனதில் ஈரம் கொண்டு மனிதநேயம் காக்க கூடியவர்களாக கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் உன்னத தன்மையுடன் விளங்குவார்கள். இந்த ராசிக்காரர்களை நண்பர்களாக பெற்றவர்கள் தவம் செய்தவர்கள்.

- Advertisement -